தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கட்டிய வீடு குறைபாடு:ரூ.1.48 லட்சம் இழப்பீடு

கட்டிய வீடு குறைபாடு:ரூ.1.48 லட்சம் இழப்பீடு

கட்டிய வீடு குறைபாடு:ரூ.1.48 லட்சம் இழப்பீடு


UPDATED : செப் 21, 2026 11:17 PM

ADDED : செப் 21, 2026 07:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 21, 2026 11:17 PM ADDED : செப் 21, 2026 07:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கவுண்டம்பாளையம், அசோக் மேளா பகுதியை சேர்ந்தவர் ஜவஹர் ராஜா. இடிகரையில் புதிய வீடு கட்ட சாமநாயக்கன்பாளையத்திலுள்ள சிவில் இன்ஜினியர் சதீஷ்குமார் நடத்தி வரும் கட்டுமான நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தார். 790 சதுர அடிக்கு, மொத்தம் ரூ.15.80 லட்சம் நிர்ணயித்து 2024, ஆக., 22 ல் கையெழுத்திட்டனர். கட்டட பணி ஆரம்பித்த பின் பல தவணையாக ஒப்பந்தத்தப்படி பணத்தை கொடுத்தார்.

ஆனால், கட்டட பணிகளை முழுவதும் முடிக்காமல் 30 சதவீத பணிகள் நிலுவையில் வைத்தார். இது பற்றி சதீஷ்குமாரிடம் கேட்ட போது, ஓராண்டு கட்டட பணியை கிடப்பில் போட்டார். மேலும், ரூ.80,000 கொடுத்தால் பணி செய்வதாக கூறியிருக்கிறார். இதனால், மேலும் ரூ.30,000 கொடுத்துள்ளார். அதன் பிறகும் கட்டட பணியை முடிக்கவில்லை. வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். அதற்கு உரிய பதில் அளிக்கவில்லை.

இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ஜவஹர் ராஜா புகார் மனு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தட்சிணாமூர்த்தி, உறுப்பினர் சுகுணா ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், '' கட்டட வேலைக்கு அதிகமாக பெற்றுக்கொண்ட தொகை, ரூ.88,000 எதிர்னுதாரார் திருப்பி கொடுக்க வேண்டும். மன உளைச்சலுக்கு இழப்பீடாக, ரூ.50,000, வழக்கு செலவு, ரூ.10,000 வழங்க வேண்டும்,'' என, தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us