/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிளை ஆஷ் கற்களால் ஆன கட்டடமே உறுதியானது! அடித்துச்சொல்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள்

ADDED : ஜன 27, 2024 12:09 AM

புதியதாக கட்டப்படும் கட்டடத்துக்கு, செங்கற்கள் பயன்படுத்தலாமா அல்லது பிளை-ஆஷ் கற்கள் பயன்படுத்தலாமா என்பது குறித்து, கோயம்புத்தூர் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்க (காட்சியா) உறுப்பினர் சுரேஷ் கூறியதாவது:
செங்கற்களுக்கு மாற்றாக, பிளை-ஆஷ் எனப்படும் சிமென்ட் கற்கள் பயன்படுத்தப்படுகிறது. இது செங்கற்களை காட்டிலும் உறுதி தன்மையும், விலை குறைவாகவும், சந்தைகளில் விரைவாகவும் கிடைக்கிறது.
பிளை ஆஷ் செங்கற்களின் உட்புறமும், வெளிப்புறமும் மிகக் குறைவான அளவில் பூச்சு கலவை பயன்படுத்தலாம். மிகக்குறைவாக பூச்சு பயன்படுத்தப்படுவதால், நமது கட்டடம் உறுதியாகவும் பட்ஜெட்டுக்கு ஏற்றதாகவும், இந்த பிளை ஆஷ் செங்கல் உள்ளது.
9 அங்குல சுவற்றிற்கு, 1:6 என்ற கலவை விகிதத்திலும், நான்கரை அங்குல சுவற்றிற்கு 1:4 என்ற கலவை விகிதத்திலும், சிமென்ட் கலவை இருக்க வேண்டும். முடிந்தவரை சிமென்ட் கலவையை அவ்வப் போது, தேவைக்கேற்ப கலக்க வேண்டும்.
ஒரு செங்கல் வரிக்கும் இன்னொரு செங்கல் வரிக்கும் மேலே இடும் கலவை, ஒரு அங்குலத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
செங்கலின் விலையை விட, சிமென்ட் மற்றும் மணலின் விலை அதிகம். சிமென்ட் கலவை அதிக கனமாக வைத்து கட்டுவதால், கட்டடம் உறுதித்தன்மையில் பாதிப்பு ஏற்படும். கூடுதல் செலவு ஏற்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.