/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரேக்ளா பந்தயத்துக்கு காளைகள் 'ரெடி' களம் காண தீவிர பயிற்சி
/
ரேக்ளா பந்தயத்துக்கு காளைகள் 'ரெடி' களம் காண தீவிர பயிற்சி
ரேக்ளா பந்தயத்துக்கு காளைகள் 'ரெடி' களம் காண தீவிர பயிற்சி
ரேக்ளா பந்தயத்துக்கு காளைகள் 'ரெடி' களம் காண தீவிர பயிற்சி
ADDED : ஜன 09, 2025 11:26 PM

பொள்ளாச்சி; பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால், பொள்ளாச்சி சுற்றுப்பகுதி கிராமங்களில், ரேக்ளா போட்டிக்கு காளைகளை தயார்படுத்தும் பணியில் உரிமையாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தமிழகத்தில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகி-றது. கொங்கு மண்டலத்தை பொறுத்தமட்டில் ரேக்ளா போட்டி முக்கிய பங்கு வகிக்கிறது. இப்போட்டியில் வெற்றி பெறும் காளைகளுக்கு, தங்கம், வெள்ளி, ரொக்கப் பணம் வழங்கப்படுகிறது.
பொள்ளாச்சி சுற்றுப்பகுதி கிராமங்களில், விவசாயிகள் பலர், அதிக-ளவில் காளைகள் வளர்க்க முனைப்பு காட்டி வருகின்றனர். அவைகளை, ரேக்ளா உள்ளிட்ட போட்டிகளில், பங்கேற்க செய்யும் வகையில் பயிற்சி அளித்தும் வருகின்றனர்.
குறிப்பாக, போட்டிக்கு தயாராகும் காளைகளுக்கு சத்தான உணவுகள் வழங்கப்படுகிறது. அதேபோல, காளைகளுக்கு நடைபயிற்சி, பின் உழவு மாடுகளுடன் சேர்ந்து பூட்டுதல், வண்டியில் பூட்டி ஓடச் செய்தல், நீச்சல் என பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
அதன்ஒரு பகுதியாக, பொள்ளாச்சி அருகே சி.கோபாலபுரத்தில், ஜல்லிக்கட்டு காளைகள் மட்டுமின்றி கிடாரிகளுக்கும் தீவிர பயிற்சி அளிக்கப்படுகிறது.
காளை உரிமையாளர்கள் கூறியதாவது:
பூ பொங்கல் தினத்தன்று, சி.கோபாலபுரம் பிரிவில் ரேக்ளா பந்தயம் நடத்தப்படவுள்ளது. இப்போட்டியில், ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த காளைகள் பங்கேற்க உள்ளன. போட்டியானது, இரு பிரிவுகளில் நடத்தப்படுகிறது.
அதாவது, மூன்றரை முதல் பத்து ஆண்டு வயது, காளைகள் என பிரிக்கப்பட்டு, 200 மீ., 300 மீ., துாரத்திற்கு ஓட்டப் போட்டி நடத்தப்படுகிறது. ரேக்ளா போட்டிகள் நடத்தப்படுவதால், காங்கயம் காளைகள் வாங்க பலரும் ஆர்வம் காட்டுகின்றனர்.
ரேக்ளா போட்டிகள் வாயிலாக, நாட்டு மாடு இனமும் காக்கப்படுகிறது. அதேபோல, காளைகளின் உடல் வலிமைக்காக, வழக்கமான உணவை தவிர்த்து, பேரீச்சம் பழம், பருத்தி விதை, புண்ணாக்கு, முட்டை, கோதுமை, தவிடு போன்ற ஊட்டமளிக்கும் உணவுகள் வழங்கப்படுகிறது.
குறிப்பாக, உடற்பயிற்சி போட்டிக்கு தயாராகும் வீரர்களை போல், ஒவ்-வொரு காளையும் ரேக்ளா போட்டிக்கு தயாராகி வருகின்றன. களத்-திற்கு காளைகளும், களத்தில் சந்திக்க காளையர்களும், ரேக்ளா போட்டிக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

