/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாத்ரூம் ஜன்னல் வழியாக வீட்டுக்குள் நுழைந்து திருட்டு
/
பாத்ரூம் ஜன்னல் வழியாக வீட்டுக்குள் நுழைந்து திருட்டு
பாத்ரூம் ஜன்னல் வழியாக வீட்டுக்குள் நுழைந்து திருட்டு
பாத்ரூம் ஜன்னல் வழியாக வீட்டுக்குள் நுழைந்து திருட்டு
ADDED : ஜூலை 04, 2025 10:27 PM
கோவை; பீளமேடு பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குள் பாத்ரூம் ஜன்னல் வழியாக நுழைந்து, நகை திருடிச்சென்றவர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கோவை, பீளமேடு சிவில் ஏரோடிராம், திருநகரை சேர்ந்தவர் சுகுமார், 68; ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவரது மூத்த மகன் ஐதராபாத்தில் வசிக்கிறார். ஏப்., 10ல் சுகுமார் தனது மகனை பார்க்க வீட்டை பூட்டி விட்டு ஐதராபாத் சென்றார்.
ஜூலை 1ல் சுகுமாரின் வீட்டு காவலாளி, வீட்டை சுற்றி வந்தபோது, பாத்ரூம் ஜன்னல் கழற்றப்பட்டு இருந்ததை கவனித்தார்.
இதுகுறித்து சுகுமாருக்கு தகவல் தெரிவித்தார். சுகுமார், தனது தம்பி ஜெகதீசுக்கு சம்பவத்தை கூறி, வீட்டுக்குச் சென்று பார்க்கச் சொல்லியுள்ளார்.
ஜெகதீஸ் சென்று பார்த்தபோது, பாத்ரூம் ஜன்னல் வழியாக நுழைந்து, வீட்டுக்குள் இருந்த பீரோவை திறந்து நகைகளை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. ஐதராபாத்தில் இருந்து கோவைக்கு சுகுமார் திரும்பி வந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த, 3 சவரன் தங்க செயின் மற்றும் 2 சவரன் தங்க மோதிரம் என 5 சவரன் நகைகள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
இதேபோல், பீளமேடு பெரியார் நகரிலும், ஜூலை 1ம் தேதி வீட்டின் பூட்டை உடைத்து, 10.5 சவரன் நகை திருடப்பட்டிருந்தது.