/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பஸ் வரும் நேரம் அறிவிப்பு தேவை
/
பஸ் வரும் நேரம் அறிவிப்பு தேவை
ADDED : டிச 12, 2024 05:41 AM
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு புது பஸ் ஸ்டாண்டில் இருந்து, பொள்ளாச்சி, கோவை மற்றும் கிணத்துக்கடவு சுற்றியுள்ள கிராமங்களுக்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது. பஸ் ஸ்டாண்டில், பஸ் வழித்தடம், நேரம் குறித்த அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இந்த அறிவிப்பு பலகை இல்லை. இதனால், பஸ் வரும் நேரம் தெரியாமல் பயணியர் அவதிக்கு உள்ளாகின்றனர். பயணியர் பஸ்சை தவற விடுகின்றனர்.
கோவை போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், 'பஸ் வழித்தடம் மற்றும் நேரம் குறித்து அறிவிப்பு பலகை பேரூராட்சி நிர்வாகம் வைக்க வேண்டும். பஸ் வரும் நேரம் குறித்து அறிவிப்பை போக்குவரத்து துறைக்கு தபால் வாயிலாக கேட்டறிந்து, அறிவிப்பு பலகை வைத்துக் கொள்ளலாம்,' என்றனர்.