ADDED : செப் 27, 2024 11:01 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்: பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி சீனிவாசபுரத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர், 43. தனியார் மருந்து கம்பெனியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
கோவை குனியமுத்துரைச் சேர்ந்த மருந்து விற்பனை பிரதிநிதி சந்தோஷ், 32. இருவரும் பைக்கில் குன்னூரில் இருந்து, கோவைக்கு வந்து கொண்டிருந்தனர். மோட்டார் பைக்கை பாஸ்கர் ஓட்டி வந்தார். கல்லாறு அருகே எதிரே வந்த அரசு பஸ் மீது பைக் மோதியது. இதில் சந்தோஷ் உயிரிழந்தார். பாஸ்கர் படுகாயமடைந்தார்.