ADDED : ஏப் 09, 2026 09:22 PM
போத்தனூர்: சுந்தராபுரம் குறிச்சி குளத்தில் மாலை பொள்ளாச்சியிலிருந்து கோவை வந்த அரசு பஸ், 34 பெண்கள் உள்பட, 68 பயணிகளுடன் வந்தது. டிரைவர் ரவிக்குமார் பஸ்சினை ஓட்டி வந்தார். பொங்காளியம்மன் கோயிலை அடுத்த வேகத்தடையை கடந்தபோது, சக்கரத்திலிருந்து காற்று வெளியேறும் சத்தம் கேட்டது.
டிரைவர் ரவிகுமார் பஸ்சை ஓரமாக நிறுத்தினார். 34 பெண்கள் உட்பட 68 பயணிகளும் இறங்கினர். கண்டக்டர் சிதம்பரத்துடன் சேர்ந்து சக்கரங்களை ரவிகுமார் பரிசோதித்தார். அப்போது திடீரென இன்ஜினில் தீ பிடித்தது.
அக்கம்பக்க மக்கள் உதவியுடன் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். பின்னர் வந்த தீயணைப்பு படையினர், தீ மேலும் பரவாமல் தடுத்தனர். தொடர்ந்து டீசல் டியூப் வழியே டீசல் வெளியேறியது. ஒரு குடத்தில் அதை சேகரித்தனர். டிரைவர் தக்க சமயத்தில் பஸ்சை நிறுத்தி, பயணிகளை இறக்கியதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
