/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மூன்று ஆண்டுகளுக்கு பின் பஸ் இயக்கம்; பட்டாசு வெடித்து கொண்டாடிய மக்கள்

ADDED : டிச 10, 2024 11:55 PM

கோவை ; மூன்று ஆண்டுகளுக்கு பின் பஸ் இயக்கப்பட்டதை, பட்டாசு வெடித்து பொதுமக்கள் கொண்டாடினர்.
கோவை மாவட்டம் மருதமலை ரோட்டில், கல்வீரம்பாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில், கணுவாய், வடவள்ளி, மருதமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
கணுவாயில் இருந்து கல்வீரம்பாளையம் பகுதிக்கு பஸ் வசதி இல்லாததால், ஷேர் ஆட்டோ மற்றும் தனியார் வாகனங்களில், மாணவர்கள் சென்று வந்தனர். இப்பகுதி மக்களுக்கும் பொதுப்போக்குவரத்து இல்லாததால், கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
சோமையம்பாளையம் வரை மட்டும், ஒரே ஒரு அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. அந்த அரசு பஸ்ஸை, பள்ளி மாணவர்களுக்காக கல்வீரம்பாளையம் வரை நீட்டிக்க மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, கணுவாயில் இருந்து கல்வீரம்பாளையம் வரை, பஸ் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் முதல், இந்த பஸ் சேவை துவங்கியது. இதையடுத்து அப்பகுதியினர், சோமையம்பாளையம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். பஸ் டிரைவர், கண்டக்டருக்கு பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.