ADDED : மார் 19, 2026 04:24 AM
அ நிறம் | அளவு
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள ரோஸ் கார்டன் பகுதியில் விழுதுகள் பொதுநல அமைப்பின் சார்பில் புதுப்பிக்கப்பட்ட பேருந்து நிழற்குடை திறப்பு விழா நடந்தது.
கடந்த, 1996--97ம் ஆண்டில் தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இந்த நிழற்குடை கட்டப்பட்டது.
நீண்ட காலமாக பராமரிப்பின்றி சிதலமடைந்து இருந்தது. இதை பொதுமக்கள் மற்றும் விழுதுகள் அமைப்பின் உறுப்பினர்கள் இணைந்து சீரமைத்தனர். புதுப்பிக்கப்பட்ட நிழற்குடையின் திறப்பு விழாவுக்கு மோகன்ராஜ் தலைமை வகித்தார். தங்கவேலு வரவேற்றார்.
தமிழ்நாடு மின்சார வாரிய உதவி இன்ஜினியர் ரத்தினகுமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
சீரமைப்பு பணிக்கு நிதி உதவி செய்தவர்களுக்கு சால்வைகள் அணிவிக்கப்பட்டன.
