/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பஸ் ஸ்டாண்டுகள் நகரின் வெளியே போட்டும்... போட்டும்! 'மாஸ்டர் பிளானில்' முன்மொழிவு
/
பஸ் ஸ்டாண்டுகள் நகரின் வெளியே போட்டும்... போட்டும்! 'மாஸ்டர் பிளானில்' முன்மொழிவு
பஸ் ஸ்டாண்டுகள் நகரின் வெளியே போட்டும்... போட்டும்! 'மாஸ்டர் பிளானில்' முன்மொழிவு
பஸ் ஸ்டாண்டுகள் நகரின் வெளியே போட்டும்... போட்டும்! 'மாஸ்டர் பிளானில்' முன்மொழிவு
UPDATED : பிப் 17, 2024 02:46 AM
ADDED : பிப் 17, 2024 02:09 AM

கோவை;கோவை நகர்ப்பகுதியில் உள்ள பஸ் ஸ்டாண்டுகளால், போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதால், அவற்றை நகருக்கு வெளியே இடமாற்றம் செய்ய வேண்டுமென்கிற முன்மொழிவு, 'மாஸ்டர் பிளான்' வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும், 2041ம் ஆண்டு மக்கள் தொகையை கணக்கிட்டு, 30 ஆண்டுகளுக்கு பின், வரைவு மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்பட்டுள்ளது.
நகர ஊரமைப்புத்துறையின் இணைய தளத்தில் பார்வையிடலாம் அல்லது அத்துறை அலுவலகத்துக்கு நேரில் சென்று, இலவசமாக பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்சேபனை இருந்தாலோ அல்லது கருத்து தெரிவிக்க விரும்பினாலோ, 60 நாட்களுக்குள் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
முக்கிய முன்மொழிவுகள்
l நகரின் மையப்பகுதியான காந்திபுரத்தில், பஸ் ஸ்டாண்டுகள் இருப்பதால், போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. அதனால், நகருக்கு வெளியே மாற்ற வேண்டும். வெள்ளலுார், நீலாம்பூர், வெள்ளமடை பகுதிக்கு, பஸ் ஸ்டாண்ட்டுகளை மாற்ற வேண்டும்.
l நகர பேருந்து முனையங்களை, மேட்டுப்பாளையம் ரோட்டில் துடியலுார்; அவிநாசி ரோட்டில் நீலாம்பூர் மற்றும் சின்னியம்பாளையம்; வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகே பெரியநாயக்கன்பாளையம் டவுன் பஸ் முனையம், பேரூர் செட்டிபாளையத்தில் பேரூர் பஸ் முனையம், வடவள்ளி, மதுக்கரையில் பஸ் முனையம், சத்தி ரோட்டில் குரும்பபாளையத்தில் பஸ் முனையங்கள் ஏற்படுத்த வேண்டும்.
l இருகூர் - இடையர்பாளையம், பட்டணம் - ஓராட்டுக்குப்பை, சூலுார் - செலக்கரிச்சல், செட்டிபாளையம் - மயிலேறிபாளையம், வெள்ளலுார் - செட்டிபாளையம் வரை 95.4 கி.மீ., துாரத்துக்கு ரோடுகளை, 100 அடி அகலத்துக்கு, விரிவாக்கம் செய்ய வேண்டும்.
l வெள்ளலுார் - சிங்காநல்லுார், வெள்ளலுார் - ராமநாதபுரம் செல்லும் ரோடுகளை, 16.4 கி.மீ., துாரத்துக்கு, 80 அடி அகலத்துக்கு விரிவாக்கம் செய்ய வேண்டும்.
l நகரமயமாகி வருவதால், நொய்யல் ஆறு மாசடைவது அதிகரித்து வருகிறது. தண்ணீரின் மாசு அளவு அதிகமாக காணப்படுகிறது. ஆகவே, ஆற்றின் நீர் வழித்தடத்தை, மறுகட்டமைப்பு செய்ய வேண்டும். இதேபோல், கவுசிகா நதியையும் மறுகட்டமைப்பு செய்ய வேண்டும்.
ஆக்கிரமிப்புகளால் சங்கனுார் பள்ளத்தின் நீர் வழித்தடம் சுருங்கியிருக்கிறது. மறுசீரமைப்பு பணி மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட, பல்வேறு முன்மொழிவுகள் இடம் பெற்றுள்ளன.