/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பஸ்கள் நிறுத்தும் இடங்கள் மாற்றி அமைப்பு
/
பஸ்கள் நிறுத்தும் இடங்கள் மாற்றி அமைப்பு
ADDED : மார் 14, 2024 11:11 PM

மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையத்தில் பஸ் ஸ்டாண்டை, இடித்து கட்டும் பணிகள் நடைபெறுவதால், வெளியூர்களுக்கு செல்லும் பஸ்கள் இடம் மாற்றி நிறுத்தப்பட்டுள்ளன.
மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் நான்கு அடுக்குகளாக உள்ளன. முதல் அடுக்கில் கோவை செல்லும் பஸ்களும், இரண்டாவது அடுக்கில் திருப்பூர், ஈரோடு, சத்தியமங்கலம், கோபி, புளியம்பட்டி ஆகிய ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டன. மூன்றாவது அடுக்கில் டவுன் பஸ்களும், நான்காவது அடுக்கில் ஊட்டி, கோத்தகிரி, குன்னூர், கூடலூர் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டன.
தற்போது மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் நிற்கும் இடங்கள், கடைகள் ஆகியவற்றை இடித்து விட்டு, புதிதாக கட்டும் பணிகள் துவங்கியுள்ளன.
அதனால் வெளியூர்களுக்கு செல்லும் பஸ்கள், பஸ் ஸ்டாண்டிலேயே நிறுத்த, இடங்கள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளன.
கோவை செல்லும் பஸ்கள் அனைத்தும், வழக்கம் போல் பழைய இடத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளன. திருப்பூர், ஈரோடு, திருப்பூர் வழியாக வெளியூர்களுக்கு செல்லும் அனைத்தும் பஸ்களும், ஊட்டி, கோத்தகிரி பஸ்கள் நிறுத்திய இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. கோபி, சத்தியமங்கலம், புளியம்பட்டி ஆகிய ஊர்களுக்கு செல்லும் பஸ்கள், டவுன் பஸ்கள் நிற்கும் இடம் அருகே நிறுத்த மாற்றப்பட்டுள்ளது. டவுன் பஸ்கள் வழக்கம் போல் நிற்கும் இடத்தில் நிறுத்தப்படுகின்றன.
ஊட்டி, கோத்தகிரி, குன்னூர், கூடலூர் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பஸ்கள், பஸ் ஸ்டாண்டில் அம்மா உணவகம் அருகே நிறுத்த மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. எனவே பயணிகள், இதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என, போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில், அம்மா உணவகம் அருகே இருந்து, புறப்பட்டு செல்லும் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி ஆகிய ஊர்களுக்கு செல்லும் பஸ்கள், ரயில்வே ஸ்டேஷன் சாலை, வனபத்ரகாளியம்மன் கோவில் சாலை வழியாக சென்று, ஊட்டி சாலையில் சேர்கின்றன.
அது போன்று பஸ்களை இயக்காமல், பஸ் ஸ்டாண்டில் இருந்து புறப்படும் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி செல்லும் பஸ்கள், கோவை பஸ்கள் நிறுத்தும் இடத்தின் வழியாக, பஸ் ஸ்டாண்டில் சென்று, வழக்கம்போல் ஊட்டி சாலையில் செல்லும் வகையில், போக்குவரத்தை மாற்றி அமைக்க, போலீசாரும், அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பயணிகள் கூறினர்.

