/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நடுரோட்டில் பஸ் நிறுத்தம் போக்குவரத்து பாதிப்பு
/
நடுரோட்டில் பஸ் நிறுத்தம் போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஜன 17, 2025 11:40 PM

வால்பாறை, ; நடுரோட்டில் பஸ்சை நிறுத்தி பயணியரை ஏற்றி செல்வதால், வால்பாறை நகரில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
வால்பாறை அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில், பல்வேறு வழித்தடங்களில், 38 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. வெளியூர் செல்லும் பஸ்கள் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்தும், எஸ்டேட் பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்கள் காந்திசிலை வளாகத்தில் இருந்தும் இயக்கப்படுகிறது.
இது தவிர, அக்காமலை, கருமலை, வெள்ளமலை ஆகிய எஸ்டேட் பகுதிகளுக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள் பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து இயக்கப்படுகிறது.
சுற்றுலா பயணியர் அதிக அளவில் வந்து செல்லும் நிலையில், வால்பாறை நகரில் சாலையோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
இந்நிலையில், வால்பாறை புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியிலிருந்து இயக்கப்படும் பெரும்பாலான பஸ்கள், போக்குவரத்துக்கு இடையூறாக நடுரோட்டில் நிறுத்தி பயணியரை ஏற்றி செல்வதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதோடு, பயணியரும் அவசர, அவசரமாக பஸ் ஏற வேண்டிய நிலை உள்ளது.
எனவே, போக்குவரத்து நெரிசல் மிகுந்த வால்பாறை பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியிலிருந்து இயக்கப்படும் அரசு பஸ்கள், பஸ் ஸ்டாண்டில் இருந்து கிளம்பி பின், நடுரோட்டில் நிறுத்தி  பயணியரை ஏற்றி செல்லவதை தவிர்க்க வேண்டும், என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

