/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வரும் 28ல் பஸ் ஊழியர்கள் ஊதிய பேச்சு
/
வரும் 28ல் பஸ் ஊழியர்கள் ஊதிய பேச்சு
ADDED : டிச 22, 2024 02:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார்:கோவை மாவட்டம், சூலுார் பஸ் ஸ்டாண்டில் நடந்த நிகழ்ச்சியில், போக்கு வரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது:
மக்கள் பயன் பெறும் வகையில், 8,020 பஸ்கள் வாங்க முடிவு செய்யப்பட்டு, தற்போது, 3,000 பஸ்கள் வந்துள்ளன. பெண்கள் இலவச பயணம் திட்டம் துவக்கப்பட்ட போது, 40 சதவீதமாக இருந்தது. தற்போது, 69 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இதுவரை, 595 கோடி இலவச பயணம் நடந்துள்ளது. பஸ் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு குறித்து வரும், 28, 29ம் தேதிகளில் பேச்சு நடக்கவுள்ளது. ஓய்வு பெற்றவர்களுக்கான நிலுவை தொகை விரைவில் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.