/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இரு மாதங்களில் ரூ.75.40 லட்சம் ஹவாலா பறிமுதல் கடத்தலுக்கு பஸ்களே குருவிகளின் புது சாய்ஸ்

ADDED : டிச 13, 2025 05:01 AM
கோவை: இரு மாதங்களில், ரூ.75.40 லட்சம் ஹவாலா பணம் கைப்பற்றப்பட்ட நிலையில், இதை மேற்கொள்ளும் குருவிகள், கடத்தலுக்கு பஸ்களையே அதிகம் பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது.
கேரளாவுக்கு தங்கம், வெள்ளி பொருட்கள் கடத்தல், ஹவாலா பணப்பரிமாற்றம் தடுக்க, போலீசார் மாநில எல்லைப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபகாலமாக கடத்தல் பேர் வழிகள், பஸ்களில் பணம் கடத்தும் நடைமுறையை பின்பற்றுகின்றனர். கடந்த இரு மாதங்களில் மட்டும், ஹவாலா பணம், ரூ.75.40 லட்சத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
போலீஸ் உயர் அலுவலர் ஒருவர் கூறியதாவது:
கே.ஜி.சாவடி, எட்டிமடை, வாளையார், வேலந்தாவளம், வீரப்பகவுண்டனுார், நடுப்புனி, பொள்ளாச்சி கோபாலபுரம் ஆகிய பகுதிகள், கேரளாவின் எல்லையை ஒட்டி வருகின்றன. இவ்வழியாகவே கேரளாவுக்கு கடத்தல் நடக்கிறது. இப்பகுதிகளில் சோதனை சாவடிகள் உள்ளன. இங்கு மூன்று போலீசார் சுழற்சி முறையில் போலீசார் பணியில் இருப்பர்.
வாளையாரில், ஆறு பேர் வரை பணியில் இருப்பர். ஆக., மாதம் எட்டிமடை சோதனை சாவடியில் மட்டும், ரூ.75.40 லட்சம் பணம், பறிமுதல் செய்யப்பட்டது. இது தவிர, 2.500 கிலோ வெள்ளியும் பறிமுதல் செய்யப்பட்டது.
பஸ்ஸில் பணம் கடத்தப்படுவதாக வந்துள்ள தகவலை தொடர்ந்து, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்து சோதனை சாவடிகளிலும், வாகன எண்களை பதிவு செய்யும் ஏ.ஐ., கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு, அவர் கூறினார்.