/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஏர்ஹாரன் பயன்படுத்திய பஸ்கள் சிறைபிடிப்பு
/
ஏர்ஹாரன் பயன்படுத்திய பஸ்கள் சிறைபிடிப்பு
ADDED : செப் 25, 2024 12:05 AM
கோவை : கோவை நகரில் ஏர்ஹாரன் பயன்படுத்திய பஸ்களை சிறைபிடித்து, அபராதம் விதித்தனர் மோட்டார் வாகன ஆய்வாளர்கள்.
கோவை நகரில் அதிக அளவில், ஏர்ஹாரன்கள் பயன்படுத்துவதாக, கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலர் சத்தியமூர்த்திக்கு புகார் சென்றது. இதையடுத்து, மத்திய வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர்கள், நேற்று திடீர் சோதனையில் இறங்கினர்.
காந்திபுரம் நகர பஸ் ஸ்டாண்டின் கிழக்கு நுழைவாயிலில், நேற்று மாலை மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சோதனை மேற்கொண்ட போது, 15 தனியார் மற்றும், 12 அரசு பஸ்களில் ஏர்ஹாரன்கள் பயன்படுத்துவது தெரியவந்தது.
இதையடுத்து, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பறிமுதல் செய்து, ஒவ்வொரு பஸ்சுக்கும் 5,000 ரூபாய் அபராதம் விதித்து, எச்சரித்து அனுப்பினர்.
மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வதீபா கூறுகையில், ''ஏர்ஹாரன் பயன்படுத்துவதால் மனச்சிதைவு ஏற்பட்டு, விபத்துக்கு வழிவகுக்கும். அதனால் பயன்படுத்த வேண்டாம் என்கிறோம்,'' என்றார்.