/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலையை ஆக்கிரமிக்கும் புதர்; திணறும் வாகன ஓட்டுநர்கள்
/
சாலையை ஆக்கிரமிக்கும் புதர்; திணறும் வாகன ஓட்டுநர்கள்
சாலையை ஆக்கிரமிக்கும் புதர்; திணறும் வாகன ஓட்டுநர்கள்
சாலையை ஆக்கிரமிக்கும் புதர்; திணறும் வாகன ஓட்டுநர்கள்
ADDED : டிச 10, 2024 11:30 PM

பொள்ளாச்சி; கிராமப்புற சாலைகளின் ஓரத்தை ஆக்கிரமித்து வளர்ந்திருக்கும் செடி, கொடிகளை அப்புறப்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதியில், தொடர் மழை காரணமாக, கிராம சாலையோரத்தில் செடி, கொடிகள் நன்கு வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. சில பகுதிகளில், சாலையை ஆக்கிரமித்து புதர் வளர்ந்துள்ளது.
இதனால், சாலையின் அகலம் குறைந்து, வாகனங்கள் சீரான இயக்கம் தடைபட்டுள்ளது. எதிரே வாகனம் வரும் போது, ஒதுங்கி செல்ல வழி இல்லாத நிலை உள்ளது.
குறிப்பாக, கருப்பம்பாளையம், நாட்டுக்கல்பாளையம், நம்பியமுத்துார் உள்ளிட்ட பல கிராமங்களுக்கு செல்லும் சாலையின் ஓரம், புதர்மண்டி காணப்படுகிறது. ஒரு வாகனம் சென்றால், எதிரே வாகனங்கள் கடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
சாலையில் செடி, கொடி மற்றும் முட்புதர்கள் இருப்பதால் வாகன ஓட்டுநர்கள் திணறி வருகின்றனர். இரு சக்கர வாகனங்களில் வேகமாக செல்ல முற்படுவோர், விபத்தில் சிக்கி காயமடைகின்றனர்.
இது மட்டுமின்றி, இரவு நேரங்களில் பாம்பு போன்ற விஷ பூச்சிகள் சாலையில் ஓரத்தில் முட்புதரில் இருப்பதால் வாகன ஓட்டுநர்கள், பாதசாரிகள் அச்சமடைகின்றனர். எனவே, கிராமப்புற மற்றும் நகர் பகுதியில் சாலை ஓரத்தில் வளர்ந்துள்ள செடி, கொடி மற்றும் முட்புதர்களை அகற்ற வேண்டும், என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.