/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அறிவிப்பு பலகைகளை மறைக்கும் புதர்கள்; கண்டறிந்து அப்புறப்படுத்த கோரிக்கை
/
அறிவிப்பு பலகைகளை மறைக்கும் புதர்கள்; கண்டறிந்து அப்புறப்படுத்த கோரிக்கை
அறிவிப்பு பலகைகளை மறைக்கும் புதர்கள்; கண்டறிந்து அப்புறப்படுத்த கோரிக்கை
அறிவிப்பு பலகைகளை மறைக்கும் புதர்கள்; கண்டறிந்து அப்புறப்படுத்த கோரிக்கை
ADDED : ஆக 05, 2025 11:39 PM

பொள்ளாச்சி; நெடுஞ்சாலைத் துறையால், சாலையோரம் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகைகள், வாகன ஓட்டுநர்களுக்கு உரிய வழிகாட்டுதலை வழங்க முடியாத நிலையில் உள்ளன.
'எந்த ஊருக்கு, எந்த பாதையில், எவ்வளவு தொலைவு பயணிக்க வேண்டும்' என்ற தகவலை அறிந்துக்கொள்ள, நெடுஞ்சாலைத்துறை சார்பில், ஆங்காங்கே தகவல் வழிகாட்டி பலகைகள் வைக்கப்படுகின்றன.
மாநில, தேசிய நெடுஞ்சாலை மட்டுமின்றி, கிராமப்புற ரோட்டோரங்களிலும், இத்தகைய வழிகாட்டி பலகைகள் வைக்கப்படுகின்றன. தவிர, வாகன ஓட்டுநர்களை 'அலர்ட்' செய்யும் வகையில், 'மதுபோதையில் வாகனம் ஓட்டக் கூடாது'.
'அதிவேகம் ஆபத்தில் முடியும்' என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு டிஜிட்டல் பலகைளும் வைக்கப்படுகின்றன. அதன்படி, பொள்ளாச்சி நகரில் இருந்து, திருப்பூர், கோவை, திருச்சூர், பாலக்காடு நோக்கிய வழித்தடங்களில் அதிகப்படியான அறிவிப்பு மற்றும் விழிப்புணர்வு பலகைகள் இடம்பெற்றுள்ளன.
ஆனால், பொள்ளாச்சி நகரின் பல இடங்களில் உள்ள அறிவிப்பு பலகைகள், தனியாரின் விளம்பரங்களை தாங்கி நிற்கும் நிலையில் உள்ளன; அதில் உள்ள தகவல்கள், மறைக்கப்படுகின்றன.
இதனால், வாகன ஓட்டுநர்கள், சரியான வழித்தடம் அறிந்து கொள்ள முடியாமல், குழப்பமடைகின்றனர்.
இது ஒருபுறமிருக்க, சமீபத்தில் பெய்த தொடர் மழையால், ரோட்டோரத்தில் செடிகள், கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடப்பதால், அறிவிப்பு மற்றும் விழிப்புணர்வு பலகைள், வாகன ஓட்டுநர்களின் கண்களில் தென்படுவதில்லை.
எனவே, நெடுஞ்சாலைத் துறையினர், அவ்வப்போது ஆய்வு செய்து, இத்தகைய குறைகளை நிவர்த்தி செய்தால் மட்டுமே, குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும்.
அத்துடன், வழிகாட்டி பலகைகளில், போலீஸ் ஸ்டேஷன், மருத்துவமனை, தீயணைப்பு நிலையம் போன்றவற்றின் தொலைபேசி எண்களை எழுதி வைப்பது, வாகன ஓட்டுநர்களுக்கு கூடுதல் பயனளிக்கும் என, கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.