/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின் பிரச்னையால் பாதிப்பு; வணிக நிறுவனத்தினர் அவதி
/
மின் பிரச்னையால் பாதிப்பு; வணிக நிறுவனத்தினர் அவதி
மின் பிரச்னையால் பாதிப்பு; வணிக நிறுவனத்தினர் அவதி
மின் பிரச்னையால் பாதிப்பு; வணிக நிறுவனத்தினர் அவதி
ADDED : ஜூன் 11, 2025 07:44 PM
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு சர்வீஸ் ரோட்டில், இரு புறமும் அதிகளவு கடைகள், வணிக வளாகங்கள் உள்ளன. இப்பகுதிகளில் கடந்த இரு நாட்களாக உயர் மின்னழுத்தம் மற்றும் குறைவான மின்னழுத்தம் மாறி மாறி இருந்ததால், கடைகளில் இருந்த பிரிண்டர், ஜெராக்ஸ் மிஷின் உள்ளிட்ட பொருட்கள், 'ஷார்ட் சர்க்யூட்' ஏற்பட்டு புகைந்தது. இதனால் கடை வைத்திருப்பவர்கள் பாதித்தனர்.
இதேபோன்று, சொக்கனூர் பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இரவு நேரத்தில் மின் தடை ஏற்பட்டால், மறுநாள் காலையில் தான் மின் பணியாளர்கள் வருகின்றனர்.
கிராம பகுதிகளில் மின்தடை ஏற்பட்டால், உடனடியாக சரி செய்வதில்லை. தற்போது பள்ளி துவங்கியுள்ள நிலையில், குழந்தைகள் இரவு நேரத்தில் வீட்டு பாடம் எழுதவும், படிக்கவும் சிரமப்படுகின்றனர். எனவே, மின் துறை சார்பில் மக்கள் நலன் கருதி, சீராக மின்சாரம் வினியோகம் செய்ய வேண்டுமென, மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.