/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தினமலர் 'பள்ளி வழிகாட்டி' இன்று துவக்கம்: கல்விக்கான அடித்தளம் சரியாக அமைக்க வாங்க!
/
தினமலர் 'பள்ளி வழிகாட்டி' இன்று துவக்கம்: கல்விக்கான அடித்தளம் சரியாக அமைக்க வாங்க!
தினமலர் 'பள்ளி வழிகாட்டி' இன்று துவக்கம்: கல்விக்கான அடித்தளம் சரியாக அமைக்க வாங்க!
தினமலர் 'பள்ளி வழிகாட்டி' இன்று துவக்கம்: கல்விக்கான அடித்தளம் சரியாக அமைக்க வாங்க!
ADDED : ஜன 20, 2024 02:28 AM
கோவை;'தினமலர்' நாளிதழ் மற்றும் எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனங்கள் சார்பில், பள்ளி வழிகாட்டி நிகழ்ச்சி, கோவை அவிநாசி ரோட்டில் உள்ள சுகுணா கல்யாண மண்டபத்தில் இன்றும், நாளையும் நடக்கிறது.
கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் துவக்கி வைக்கவுள்ளார். சவால்கள் நிறைந்த தொழில்நுட்ப உலகில் நம் பிள்ளைகள் நிலைத்து ஜெயித்திட, கல்வி என்ற கூர்மையான ஆயுதத்தை வழங்கவேண்டியது அனைத்து பெற்றோரின் தலையாய கடமை. அக்கல்வியை நமக்கு சிறந்த முறையில் அளிக்கும் பள்ளியை தேர்வு செய்வது என்பது தற்போதைய சூழலில் எளிதான காரியமல்ல. குழந்தைகளின் கல்விக்கான அடித்தளத்தை சரியாக அமைக்க விரும்பும் பெற்றோருக்கு, இந்நிகழ்ச்சி சரியான வாய்ப்பு வழங்குகிறது.
பிள்ளைகளுக்கு ஏட்டு கல்வியை மட்டும் அளிக்காமல், தனித்திறன்களை ஊக்குவித்து, நல்ல பண்புகள், வாழ்க்கை கல்வியை அளிக்கும் பள்ளியை தேர்வு செய்ய வேண்டும். மத்திய கல்வி வாரியம், மாநில பாடத்திட்டம், சர்வதேச பாடத்திட்டம் என பல பாடத்திட்டங்களுக்கு மத்தியில், நம் பிள்ளைகளுக்கு எந்த கல்விமுறை, எந்த பள்ளி சிறந்தது என்பதை தெளிவாக அறிந்துகொள்ள உதவுகிறது, பள்ளி வழிகாட்டி நிகழ்ச்சி.
எதிர்காலத்தில் தொழில்நுட்ப ரீதியாக ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப, மாணவர்களை தற்போதே தயார்படுத்த வேண்டியது அவசியம். தொழில்நுட்பம், தொடர்புத்திறன், மொழிப்புலமை, விளையாட்டு, தொழில்முனைவோர் திறன், சுயபாதுகாப்பு, ஆராய்ச்சிகள் என ஒருங்கிணைந்த கல்விமுறையே எதிர்காலத்திற்கு ஏற்றவையாக இருக்கும்.
அதுபோன்ற பள்ளிகளை தேர்வு செய்யவும், பாடத்திட்டங்கள், கட்டண விபரம், விடுதி வசதி உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் ஒரு கூரையின் கீழ் அறிந்துகொள்ள, தினமலர் - பள்ளி வழிகாட்டி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுகுணா கல்யாண மண்டபத்தில், இன்றும், நாளையும் காலை 10:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை நடக்கிறது. இதில், 50க்கும் மேற்பட்ட பள்ளிக்கல்வி நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன. ப்ரீ. கேஜி., முதல் ஒன்பதாம் வகுப்பு வரை ஸ்பாட் அட்மிஷன் உறுதி செய்துகொள்ள முடியும். இதில், பங்கேற்க அனுமதி இலவசம்.
நிகழ்ச்சியில், நேஷனல் மாடல் குரூப் ஆப் ஸ்கூல் ஸ்பான்சராக உள்ளது. மான்செஸ்டர் இன்டர்நேஷனல் பள்ளி, ஆதித்யா வித்யாஷ்ரம், சமஸ்தி இன்டர்நேஷனல் பள்ளி, சந்திரமாரி இன்டர்நேஷனல் பள்ளி ஆகியவை, நிகழ்ச்சியை இணைந்து வழங்குகின்றன.