ADDED : செப் 25, 2024 08:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார்: உங்களுக்குள் அமைதி மற்றும் மகிழ்ச்சி உண்டாக, மு.க.புதூரில் நாளை மவுன பயிற்சி முகாம் நடக்கிறது.
ஞான சஞ்சீவனம் குருகுலம் மற்றும் சுவாமி விவேகானந்தர் இளைஞர் சக்தி இயக்கம் சார்பில், ஞான விபாசனா எனும் மவுன பயிற்சி முகாம் மு.க., புதூரில் நாளை நடக்கிறது. விவேகானந்தர் அரங்கில் காலை, 9:00 முதல், மாலை, 6:00 மணி வரை நடக்கும் பயிற்சியில், 18 வயதுக்கு மேற்பட்டோர் பங்கேற்கலாம்.
உற்சாக மன நிலையில் இருக்கவும், சிந்தனை, செயலில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த பயிற்சி மெய்ஞான வாழ்வியல் வழிகாட்டி ஆசிரியர் சசிக்குமாரால் அளிக்கப்படுகிறது. 100 பேருக்கு மட்டுமே அனுமதி. மேலும் விபரங்களுக்கு: 98422 73308.