/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் வாங்கலாம் தாய்லாந்து பர்னிச்சர்
/
கோவையில் வாங்கலாம் தாய்லாந்து பர்னிச்சர்
ADDED : ஆக 31, 2024 11:11 PM
கோவை:அவிநாசி ரோடு, கொடிசியாவில் பிரத்யேக தாய்லாந்து ஷாப்பிங் விழாவுடன், பர்னிச்சர் கண்காட்சி நடக்கிறது.
ஐ ஏட்ஸ் மற்றும் ஈவென்ட்ஸ் சார்பில், 'ஹால் பி' ல் நாளை வரை நடக்கும் இந்த கண்காட்சியில், தாய்லாந்து மட்டுமின்றி, துருக்கி, கொரியா, தைவான், மலேசியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் பிரபல பொருட்களின் ஸ்டால்கள் உள்ளன.
தாய்லாந்து அணிகலன் மற்றும் அழகுசாதன பொருட்கள், மர சமையலறை உபகரணங்கள், துருக்கி விளக்குகள், ஆப்கானிஸ்தான் உலர் பழங்கள் போன்ற, வெரைட்டியான பொருட்களை வாங்கலாம்.
சோபா, பெட்ரூம் யூனிட், மாடுலர் கிட்சன் ஸ்டைலான இன்டீரியர், எக்ஸ்டீரியர் பர்னிச்சர், நீரூற்று, ஓவியம் போன்ற கலைப்பொருட்களும் உண்டு.
நியாயமான பட்ஜெட்டில், உங்கள் ரசனைக்கேற்ற பர்னிச்சர் மற்றும் பொருட்களை வாங்கலாம். விலையில் அற்புதமான சலுகைகள் உண்டு. நுழைவுக்கட்டணம், ரூ.50 ரூபாய். காலை, 10:00 முதல் இரவு 8:30 மணி வரை பார்வையிடலாம்.