/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புறவழிச் சாலை திட்ட அறிக்கை; எம்.எல்.ஏ.க்களிடம் வலியுறுத்தல்
/
புறவழிச் சாலை திட்ட அறிக்கை; எம்.எல்.ஏ.க்களிடம் வலியுறுத்தல்
புறவழிச் சாலை திட்ட அறிக்கை; எம்.எல்.ஏ.க்களிடம் வலியுறுத்தல்
புறவழிச் சாலை திட்ட அறிக்கை; எம்.எல்.ஏ.க்களிடம் வலியுறுத்தல்
ADDED : செப் 17, 2025 09:54 PM
அன்னுார் ; கோவை கிழக்கு புறவழிச்சாலை திட்டத்தின் முழுமையான ஆவணத்தை பெற்று தரும்படி எம்.எல்.ஏ.,க்களிடம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தியது.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் கோவை கிழக்கு புறவழிச் சாலை பாதிக்கப்பட்டோர் இயக்கம் சார்பில், நிர்வாகிகள், கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., அருண்குமார், மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., செல்வராஜ் ஆகியோரை நேரில் சந்தித்தனர்.
எம்.எல்.ஏ.,க்களிடம், விவசாயிகள் பேசுகையில், 'கோவை கிழக்கு புறவழிச்சாலையால், 1,200 ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்படும். 2000-க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழப்பார்கள். சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு கட்டணம் வசூல் செய்யப்படும். இதனால் பெரிய பயன் இருக்காது. எனவே இந்தத் திட்டத்தை கைவிட வேண்டும்.
ஏற்கனவே உள்ள மாநில, மாவட்ட சாலைகளை விரிவுபடுத்தலாம். இத்திட்டத்தின் விபரங்கள், மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு துறைகளில் பெற்ற அனுமதி ஆகியவை அடங்கிய முழுமையான ஆவணத்தை மத்திய, மாநில அரசுகளிடமிருந்து பெற்று தர வேண்டும்,' என்றனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக எம்.எல்.ஏ.,க்கள் உறுதி அளித்தனர்.