ADDED : மார் 15, 2024 11:49 PM
அ நிறம் | அளவு
போத்தனூர்;தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் தொழிலாளர் நல வாரிய தலைவர் ஜீவா, நேற்று கோவையிலுள்ள அரசு கேபிள் டிவி கட்டுப்பாட்டு அறைக்கு வந்தார். தாசில்தார் மற்றும் அதிகாரிகளுடன், ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து, சுந்தராபுரத்திலுள்ள கேபிள் டிவி கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டார். அப்போது ஆபரேட்டர்கள், 'கேபிள் சிக்னல் அடிக்கடி பாதிக்கப்படுகிறது. குறிப்பாக, ஆப்டிக்கல் பைபர் கேபிள் ( தரை கீழ் வழி) அடிக்கடி துண்டிக்கப்படுவதால், வாடிக்கையாளர்களை சமாளிப்பது சிரமமாக உள்ளது' என கூறினர்.
''பி.எஸ்.என்.எல்., வழியே சிக்னல் கொண்டு வர, மூன்று கோடி ரூபாய் செலுத்தப்படுகிறது. அவர்களிடம் பேசி, இப்பிரச்னைக்கு தீர்வு காணலாம், என ஜீவா உறுதியளித்தார்.
