/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுத்தை, காட்டுப்பன்றிக்கு கூண்டு: வனத்துறை துணை இயக்குனர் ஆய்வு
/
சிறுத்தை, காட்டுப்பன்றிக்கு கூண்டு: வனத்துறை துணை இயக்குனர் ஆய்வு
சிறுத்தை, காட்டுப்பன்றிக்கு கூண்டு: வனத்துறை துணை இயக்குனர் ஆய்வு
சிறுத்தை, காட்டுப்பன்றிக்கு கூண்டு: வனத்துறை துணை இயக்குனர் ஆய்வு
ADDED : நவ 07, 2025 09:38 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, ஆனைமலை பகுதியில் காட்டுப்பன்றி, சிறுத்தையை பிடிக்க வைக்கப்பட்ட கூண்டை, ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆய்வு செய்தார்.
ஆனைமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில், காட்டுப்பன்றிகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாகுபடி செய்த பயிர்களை நாசம் செய்வதால் தீர்வு காண வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், ஆனைமலை வெப்பரை பகுதியில், விவசாய நிலத்தில் காட்டுப்பன்றிகள் சேதம் செய்வதை தடுக்க கூண்டு வைக்கப்பட்டுள்ளது. மேலும், கண்காணிப்பு கேமரா அமைத்து கண்காணிக்கப்படுகிறது.
அதேபோன்று, குப்புச்சிபுதுாரில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். சிறுத்தையை பிடிக்க அங்கு கூண்டு அமைக்கப்பட்டது.
காட்டுப்பன்றி மற்றும் சிறுத்தையை பிடிக்க கூண்டு அமைத்து கண்காணிக்கும் பணியை, ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவேந்திரகுமார் மீனா ஆய்வு செய்தார். ஆய்வின் போது, மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து வனச்சரகர் ஞானபாலமுருகன் மற்றும் வனத்துறையினரிடம் கேட்டறிந்தார்.