/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாதாள சாக்கடை வீட்டு இணைப்புக்கு ரூ.ஒரு லட்சம் வரை கட்டணம் வசூல்: எம்.எல்.ஏ. ஜெயராமன் குற்றச்சாட்டு
/
பாதாள சாக்கடை வீட்டு இணைப்புக்கு ரூ.ஒரு லட்சம் வரை கட்டணம் வசூல்: எம்.எல்.ஏ. ஜெயராமன் குற்றச்சாட்டு
பாதாள சாக்கடை வீட்டு இணைப்புக்கு ரூ.ஒரு லட்சம் வரை கட்டணம் வசூல்: எம்.எல்.ஏ. ஜெயராமன் குற்றச்சாட்டு
பாதாள சாக்கடை வீட்டு இணைப்புக்கு ரூ.ஒரு லட்சம் வரை கட்டணம் வசூல்: எம்.எல்.ஏ. ஜெயராமன் குற்றச்சாட்டு
ADDED : நவ 07, 2025 09:39 PM

பொள்ளாச்சி: 'பொள்ளாச்சி நகரில் பாதாள சாக்கடை திட்டத்தில், வீட்டு இணைப்புகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது,' என எம்.எல்.ஏ. ஜெயராமன் தெரிவித்தார்.
பொள்ளாச்சி தேர்நிலையம் மார்க்கெட்டில் கடைகள் கட்டப்பட்டும் இன்னும் திறக்கப்படாமல் உள்ளன. இதையடுத்து, நேற்று எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன், தேர்நிலையம் மார்க்கெட் கடைகள், பாதாள சாக்கடை திட்ட பணிகளை பார்வையிட்டார். முன்னாள் நகராட்சி தலைவர் கிருஷ்ணகுமார், கவுன்சிலர் ஜேம்ஸ்ராஜா, நிர்வாகிகள் அருணாச்சலம், கனகு மற்றும் பலர் உடனிருந்தனர்.
எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன் கூறியதாவது:
அ.தி.மு.க. ஆட்சியில் பொள்ளாச்சி தேர்நிலையம் மார்க்கெட்டை இடித்து தரைதளம், முதல் தளத்துடன் கூடிய புதிய மார்க்கெட் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக அங்கு வியாபாரம் செய்து கொண்டிருந்த வியாபாரிகளிடம், மீண்டும் கடைகள் ஒதுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.
ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், தற்போது புதிய மார்க்கெட் கட்டப்பட்டது. ஒருவருக்கு மொத்தமாக இந்த கடைகள் ஏலம் விடப்பட்டது. அங்கு வியாபாரம் செய்த வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கி தரவில்லை. இதனால், வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. ஆட்சியில் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்துக்கு, 170 கோடி ரூபாய், ரோடு போட 250 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆட்சி மாற்றத்தால் பணிகளின் தொய்வு ஏற்பட்டுள்ளது.
வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்க, 50 ஆயிரம் ரூபாய் முதல், ஒரு லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இதனால், ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். இல்லையெனில் மக்களை ஒன்றிணைத்து போராடும் நிலை ஏற்படும். நகரில் ஆங்காங்கே தேங்கி கிடக்கும் குப்பையை அகற்ற வேண்டும். நகர துாய்மை காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினார்.

