/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காட்டுப்பன்றியை பிடிக்க கூண்டு வைப்பு
/
காட்டுப்பன்றியை பிடிக்க கூண்டு வைப்பு
ADDED : அக் 26, 2025 11:31 PM

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு கோதவாடியில், காட்டுப்பன்றியை பிடிக்க வனத்துறையினரால் கூண்டு வைக்கப்பட்டுள்ளது.
கோவை, திருப்பூர் மாவட்டங்களில், வனத்தையொட்டிய கிராமங்களில் வனத்திலிருந்து வெளியேறும் காட்டுப்பன்றிகள் தோட்டத்திலுள்ள பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடி பகுதியில், 50கும் மேற்பட்ட காட்டுப்பன்றிகள் சுற்றித்திரிகின்றன.
இந்த காட்டுப்பன்றிகள் விளை நிலங்களில் புகுந்து, பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வந்தது. இதனால் விவசாயிகளுக்கு பெருமளவு நஷ்டம் ஏற்பட்டது. இதன் காரணமாக
கடலை மற்றும் கிழங்கு வகை பயிர்களை பயிரிடுவதை, முற்றிலும் தவிர்த்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து, பல ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகத்திடம், காட்டுப்பன்றிகளை பிடித்து வனத்திற்குள் விடவோ அல்லது கேரளாவில் உள்ளது போல் பன்றிகளை சுட்டுப் பிடிக்கவோ வேண்டும் என, முறையிட்டு வந்தனர்.
இதைத்தொடர்ந்து வனத்துறை சார்பில் கடந்த, 2 தினங்களுக்கு முன் காட்டுப்பன்றிகளை சுட்டுப்பிடிக்க அதிகாரிகள் துப்பாக்கிகளுடன் வந்திருந்தனர்.
கோதவாடி பகுதியில், அவை அதிகம் சுற்றித் திரியும் இடங்களை நேரில் ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து மழை பெய்ததால், சுட்டுப்பிடிக்கும் பணி நிறுத்தப்பட்டு, அதற்கு பதில் கூண்டு வைத்து பிடிக்க முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன் தினம் இரவில், பொள்ளாச்சி வனச்சரகர் ஞானபால முருகன் தலைமையில் வனத்துறையினர், கோதவாடியில் காட்டுப்பன்றிகளை பிடிக்க, 5 அடி உயரம் கொண்ட இரும்புக்கூண்டை அமைத்தனர்.

