/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'பில்ட் மேட் - 2025' கண்காட்சி வாய்ப்பு பயன்படுத்த அழைப்பு
/
'பில்ட் மேட் - 2025' கண்காட்சி வாய்ப்பு பயன்படுத்த அழைப்பு
'பில்ட் மேட் - 2025' கண்காட்சி வாய்ப்பு பயன்படுத்த அழைப்பு
'பில்ட் மேட் - 2025' கண்காட்சி வாய்ப்பு பயன்படுத்த அழைப்பு
ADDED : அக் 07, 2024 12:53 AM

கோவை : இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஆர்க்கிடெக்ட்ஸ் (ஐ.ஐ.ஏ.,), அசோசியேஷன் ஆப் கன்சல்டிங் சிவில் இன்ஜினியர்ஸ் (ஏ.சி.சி.இ.,) மற்றும் பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா (பி.ஏ.ஐ.,) சார்பில், 2025 ஜன., 23 முதல் 26ம் தேதி வரை, நீலம்பூர் பி.எஸ்.ஜி., கன்வென்ஷன் சென்டர் மற்றும் வர்த்தக கண்காட்சி மையத்தில், பில்ட் மேட் கண்காட்சி நடக்கிறது. கண்காட்சியின் அறிமுக விழா, பி.எஸ்.ஜி., கன்வென்ஷன் சென்டரில் நடந்தது.
கண்காட்சி குறித்த கையேடை, 'பில்ட் மேட் 2025' தலைவர் கரண பூபதி, உப தலைவர் பாலசுப்ரமணியம், செயலாளர் கண்ணா சொக்கலிங்கம், சங்கர் அண்ட் அசோசியேட்ஸ் ஆர்க்கிடெக்ட் ரமணி சங்கர், ஏ.சி.சி.இ., தேசிய தலைவர் விஜய்குமார் கிஷான் சனாப், கோவை மைய தலைவர் சுதாகர், பி.ஏ.ஐ., தேசிய தலைவர் விஸ்வநாதன், கோவை மைய தலைவர் லட்சுமணன், ஐ.ஐ.ஏ., கோவை மைய தலைவர் ஜெயகுமார், பில்ட் மேட் முன்னாள் தலைவர் அருண்பிரசாத், 'எல் அண்ட் டி' நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை தலைவர் கோவிந்தராஜ் ஆகியோர் வெளியிட்டனர்.
கண்காட்சியில், புதுப்புது கட்டுமான தொழில்நுட்பங்கள், இடம் பெற உள்ளதாகவும்,இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறும், கண்காட்சி குழுவினர்அழைப்பு விடுத்துள்ளனர்.

