/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கவுரவ விரிவுரையாளர்கள் விண்ணப்பிக்க அழைப்பு
/
கவுரவ விரிவுரையாளர்கள் விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஜூலை 22, 2025 06:27 AM
கோவை; தமிழக அரசு, கலை, அறிவியல் கல்லுாரிகளில், கூடுதலாக, 15,000 மாணவர்களை சேர்க்கும் வகையில், இரண்டாம் சுழற்சி எனும், 'ஷிப்ட் 2' பாடவேளை துவக்க அனுமதி அளித்துள்ளது. இதனால், 15,354 மாணவர்கள் கூடுதலாக சேருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிதாக துவக்கப்படும், 49 பாடப்பிரிவுகளுக்கு, மூன்றாண்டுகளுக்கும் சேர்த்து, 294 கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
இதுகுறித்த கருத்துருவை, உயர்கல்வித்துறை அரசுக்கு அளித்தது. அதன் அடிப்படையில், 1,524 கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்க, அரசு அனுமதி அளித்தது. முதற்கட்டமாக, 574 கவுரவ விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப, கல்லுாரி கல்வி இயக்குனரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நேற்று முதல் இப்பணிக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள், https://www.tngasa.org/ என்ற இணையதளம் வாயிலாக, ஆக., 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.