/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒப்பந்த பயிற்றுநர் பணி விண்ணப்பிக்க அழைப்பு
/
ஒப்பந்த பயிற்றுநர் பணி விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : மே 23, 2025 11:56 PM
கோவை : கோவை மகளிர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், முழு நேர தற்காலிக ஒப்பந்த பயிற்றுநர் பணிக்கு, 28 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதிய அடிப்படையில், ஒரு பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஸ்மார்ட் போன் டெக்னீசியன் மற்றும் செயலி டெஸ்டர் தொழிற்பிரிவில் காலியாக உள்ள அப்பணியிடத்துக்கு பொது போட்டி முன்னுரிமை அல்லாத இன சுழற்சியில், 37 வயதுக்குள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஐ.டி.ஐ., (என்.டி.சி.,) தேசிய தொழிற்சான்றிதழுடன் மூன்று வருட முன்அனுபவம், தொழிற்பழகுனர் சான்றிதழுடன் அதே துறையில் இரண்டு ஆண்டு முன்அனுபவம் அல்லது எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் டெலி கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேசன் மூன்று ஆண்டு பட்டயப்படிப்புடன் அதே துறையில் இரண்டு ஆண்டு முன்அனுபவம் அல்லது எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் டெலி கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேசன் பட்டப்படிப்புடன் அதே துறையில், ஒரு வருட முன்அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை, முதல்வர், அரசு தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்), ஜி.என்.மில்ஸ் அஞ்சல், கோவை என்ற முகவரிக்கு வரும், 26ம் தேதி மாலை, 5:30 மணிக்குள் அனுப்ப வேண்டுமென, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.