/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பம் தர அழைப்பு
/
மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பம் தர அழைப்பு
ADDED : ஜூலை 16, 2025 08:45 PM
வால்பாறை; தமிழக அரசு 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ், வால்பாறையில் வரும் 18ம் தேதி முதல் சிறப்பு முகாம்கள் நடக்கிறது.
வால்பாறையில் முதல் கட்டமாக வரும் 18ம் தேதி அட்டகட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் முகாமில், 1,2 வார்டுகளை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு மகளிர் உரிமைத்தொகைக்காக விண்ணப்பிக்கலாம்.
வரும், 25ம் தேதி 3,4,12,13 ஆகிய வார்டுகளை சேர்ந்த மக்கள் பயன்பெறும் வகையில் ரொட்டிக்கடை சமுதாய நலக்கூடத்தில் சிறப்பு முகாம் நடக்கிறது. ஆகஸ்ட் 1ம் தேதி வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 9,10,11 ஆகிய வார்டுகளுக்கு நடக்கிறது.
ஆக., 8ம் தேதி, 14, 21 ஆகிய வார்டுகளுக்கு நகராட்சி சமுதாயக்கூடத்திலும், 14ம் தேதி 6,7,14 ஆகிய வார்டுகளுக்கு சோலையாறு அரசு நடுநிலைப்பள்ளியிலும் மகளிர் உரிமைத்தொகைக்கான சிறப்பு முகாம்கள் நடக்கிறது.
வரும், செப்., 4ம் தேதி 17,18,19 ஆகிய வார்டுகளுக்கு முடீஸ் மத்திய நடுநிலைப்பள்ளியிலும், 7,8 வார்டுகளுக்கு செப்., 10ம் தேதி சோலையாறு அரசு மேல்நிலைப்பள்ளியிலும் முகாம் நடக்கிறது. 5,6 வார்டுகளுக்கான முகாம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். மேற்க்கண்ட தகவலை வால்பாறை நகராட்சி கமிஷனர்(பொ) கணேசன் தெரிவித்தார்.