/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நிலம் கையகப்படுத்துவது பற்றி கருத்து தெரிவிக்க அழைப்பு
/
நிலம் கையகப்படுத்துவது பற்றி கருத்து தெரிவிக்க அழைப்பு
நிலம் கையகப்படுத்துவது பற்றி கருத்து தெரிவிக்க அழைப்பு
நிலம் கையகப்படுத்துவது பற்றி கருத்து தெரிவிக்க அழைப்பு
ADDED : டிச 03, 2025 07:39 AM
அன்னுார்: 'நான்கு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த ஆட்சேபனை உள்ளோர் டிச. 16ம் தேதிக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும்,' என, நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
நெடுஞ்சாலைத்துறை மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) அறிவிப்பு :
அவிநாசியில் இருந்து அன்னுார் வழியாக மேட்டுப்பாளையத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பொதுநோக்கத்திற்காக, அன்னுார் வருவாய் கிராமத்தில்,114 பேரிடமிருந்து 101 சென்ட் நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள சாலையை அகலப்படுத்தும் பணிக்காக நெடுஞ்சாலைத் துறைக்கு நிலம் தேவைப்படுகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட அனைவரும் தமிழ்நாடு அரசு கையகப்படுத்த உத்தேசித்துள்ள நிலத்தை ஏன் கையகப் படுத்தக் கூடாது என்னும் காரண விளக்க அறிக்கையை கோவை தெற்கு தாசில்தார் அலுவலகத்தில் உள்ள கோவை மாவட்ட நெடுஞ்சாலை நில எடுப்பு அலுவலக தனி மாவட்ட வருவாய் அலுவலரிடம் வரும் 16ம் தேதிக்குள் எழுத்து மூலம் அளிக்க வேண்டும்.
எந்த ஒரு ஆட்சேபனையோ அல்லது கோரிக்கையோ, குறிப்பிட்ட தேதிக்கு பின்னர் வரப்பெற்றால், அந்த ஆட்சேபனை நிராகரிக்கப்படும். குறிப்பிட்ட காலத்திற்குள் வரப்பெற்ற ஆட்சேபனைகள், விளக்கங்கள் அனைத்தும், அன்னுாரில் உள்ள நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் வருகிற 16ம் தேதி காலை 11:30 மணிக்கு விசாரிக்கப்படும்.
அப்போது ஆட்சேபனை தெரிவித்தவர்கள், தாங்களாகவோ அல்லது தாங்கள் உரிமை வழங்கிய நபர்கள் மூலமாகவோ, ஆஜராகி தெரிவிக்கலாம். இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

