/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீட்டு தோட்டம் அமைக்க அழைப்பு; மானியத்தில் விதை, பழச்செடி தொகுப்பு
/
வீட்டு தோட்டம் அமைக்க அழைப்பு; மானியத்தில் விதை, பழச்செடி தொகுப்பு
வீட்டு தோட்டம் அமைக்க அழைப்பு; மானியத்தில் விதை, பழச்செடி தொகுப்பு
வீட்டு தோட்டம் அமைக்க அழைப்பு; மானியத்தில் விதை, பழச்செடி தொகுப்பு
ADDED : ஜூலை 22, 2025 10:06 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி, ஆனைமலை பகுதியில், தோட்டக்கலைத்துறை சார்பில், பழச்செடி தொகுப்பு, விதை தொகுப்பு மானியத்தில் வழங்கப்படுகிறது.
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், ஊட்டச்சத்து வேளாண் இயக்கம் என்ற புதிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தில், தக்காளி, கத்தரி, கீரை விதைகள் அடங்கிய காய்கறி விதை தொகுப்புகள் வழங்கப்பட உள்ளன.
பப்பாளி, கொய்யா, எலுமிச்சை உள்ளடககிய பழச்செடி தொகுப்பு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
பொள்ளாச்சி வடக்கு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் வசுமதி கூறியதாவது:
காய்கறி விதை மற்றும் பழச்செடி தொகுப்பு பெற விரும்பும் விவசாயிகள், பொதுமக்கள் தங்களது ஆதார் நகலுடன் பொள்ளாச்சி வடக்கு தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகலாம்.
மேலும், https://tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்திலும் முன்பதிவு செய்து கொள்ளலாம். பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
ஒவ்வொரு வீட்டிலும் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும் நோக்கத்தில் ஊட்டச்சத்து மிக்க வீட்டு தோட்டம் அமைக்க மானியத்தில், பழச்செடி தொகுப்பு, காய்கறி விதைகள் வழங்கப்படுகிறது.
இவ்வாறு, கூறினார்.
ஆனைமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் கூறுகையில், ''ஆனைமலை வட்டாரத்தில் தோட்டக்கலைத்துறை வாயிலாக ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் திட்டத்தின் கீழ், பழச்செடி தொகுப்பு முழு மானிய விலையில் விவசாயிகளுக்கு, உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் வினியோகிக்கப்பட்டது.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் இணையதளத்தில் ஆதார் எண், மொபைல்போன் எண் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகலாம்,'' என்றார்.