/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீடு, மனையில் முதலீடு செய்ய 'பேர் புரோ'வுக்கு அழைப்பு
/
வீடு, மனையில் முதலீடு செய்ய 'பேர் புரோ'வுக்கு அழைப்பு
வீடு, மனையில் முதலீடு செய்ய 'பேர் புரோ'வுக்கு அழைப்பு
வீடு, மனையில் முதலீடு செய்ய 'பேர் புரோ'வுக்கு அழைப்பு
ADDED : ஆக 09, 2025 01:28 AM

கோவை:
'கிரெடாய்' கோவை சார்பில், 'பேர் புரோ' வீடு வாங்குவோருக்கான மூன்று நாள் கண்காட்சி, கொடிசியா 'இ' அரங்கில், நேற்று துவங்கியது. எஸ்.பி.ஐ., எல்.ஹெச்.ஓ., நெட்வொர்க் 3 பொதுமேலாளர் ஹரிதாபூர்ணிமா துவக்கி வைத்தார்.
கண்காட்சி குறித்து, 'கிரெடாய்' தலைவர் அரவிந்த் குமார் கூறியதாவது:
கோவையில் மெட்ரோ உட்பட உட்கட்டமைப்புகள் விரிவடைகின்றன. 3 படுக்கையறை வீடுகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது. ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்ய இது மிகச்சிறந்த தருணம். அதற்கு, இந்த பேர் புரோ கண்காட்சி சிறந்த இடமாக இருக்கும். ஒரு படுக்கையறை வீடு முதல் வில்லா, ஷாப்பிங் மால்கள், ஐ.டி., துறை, அலுவலக கட்டுமானம், தொழிலக கிடங்குகள் என, பரந்து விரிந்த தேர்வை, இக்கண்காட்சி தரும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
'கிரெடாய்' செயலாளர் சஞ்சனா விஜய்குமார் கூறுகையில், ''கண்காட்சியில் ஒரே கூரையின் கீழ், மனை, வில்லா, அபார்ட்மென்ட், மூத்த குடிமக்களுக்கான குடியிருப்பு, விடுமுறைக்கால குடியிருப்பு என, எல்லா பட்ஜெட்களிலும், எல்லா பிரிவுகளிலும் தேவையானதைத் தேர்வு செய்யலாம். வங்கிகளும், பில்டர்களும் கண்காட்சியில் பிரத்யேக ஆபர்களை வழங்குகின்றனர்,'' என்றார்.
கண்காட்சியில், கிரெடாய்- ஜெ.எல்.எல்., சார்பில், கோவை ரியல் எஸ்டேட் சந்தை தொடர்பான ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது.
துவக்க விழாவில், 'பேர்புரோ' தலைவர் சுரேந்தர் விட்டல், கிரெடாய் பொருளாளர் கார்த்திக்குமார், எஸ்.பி.ஐ., கோவை துணை பொதுமேலாளர் அருண், ஜெ.எல்.எல்.,இந்தியா துணைத் தலைவர் விக்னேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.