/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்க அழைப்பு
/
ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்க அழைப்பு
ADDED : பிப் 01, 2025 01:58 AM

கோவை; ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லுாரியில் நடக்க உள்ள கருத்தரங்கிற்கு, ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.
ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில், 'சிந்தனைக் கவிஞர் கவிதாசன் படைப்புலகம் பன்முக ஆய்வு' எனும் பன்னாட்டுக் கருத்தரங்கு, வரும் மார்ச் மாதம் நடக்க உள்ளது. இதற்காக கவிதாசனின் கவிதைகள், கட்டுரைகள், கவியரங்க கவிதைகள், மேடைப்பேச்சுக்கள், ரேடியோ, டி.வி., உரைகள் ஆகியவற்றில் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.
பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், கல்லுாரி, பள்ளி மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் இக்கருத்தரங்கிற்கான கட்டுரைகளை வழங்கலாம். தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரைகள், கருத்தரங்க நாளன்று, ஐ.எஸ்.பி.என்., எண்ணுடன் புத்தகமாக வெளியிடப்படுவதோடு, கட்டுரையாளர்களுக்கு கட்டுரை புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும். சிறந்த, 10 கட்டுரைகளுக்கு ரூ.10 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்படும்.
ஆய்வுக்கட்டுரைகளை, kaviconf2025@srcas.ac.in இ-மெயிலுக்கு அனுப்ப வேண்டும். விபரங்களுக்கு, 88833 62806, 98436 82459, 95004 46604 ஆகிய, எண்களில் தொடர்பு கொள்ளலாம்.