/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குளிர்பதன கிடங்கை பயன்படுத்த அழைப்பு
/
குளிர்பதன கிடங்கை பயன்படுத்த அழைப்பு
ADDED : அக் 25, 2024 09:56 PM
அன்னுார்: அனனுார் மற்றும் காரமடையில் உள்ள குளிர்பதன கிடங்குகளை வாடகைக்கு பயன்படுத்திக் கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை துணை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கோவை மாவட்டத்தில், காரமடையில் 50 மெட்ரிக் டன் கொள்ளளவும், சிக்கதாசம்பாளையம், கிணத்துக்கடவில் 500 மெட்ரிக் டன் கொள்ளளவும் கொண்ட குளிர்பதன கிடங்குகள் உள்ளன.
அன்னுார், வடக்கிபாளையம், தொண்டாமுத்துார், ஆனைமலை, செஞ்சேரி, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் 25 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதன கிடங்குகள் உள்ளன.
விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர் இந்த கிடங்குகளை வாடகைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர்களை அனுகி பயன்பெறலாம்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.