ADDED : மார் 07, 2024 04:05 AM
உடுமலை, : தமிழ்நாடு திறன் மேம்பாட்டு பயிற்சி கழகம் மற்றும் திருப்பூர், முதலிபாளையம் நிப்ட்-டீ கல்லுாரி இணைந்து, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்புடன் கூடிய இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி துவங்கப்பட உள்ளது.
நான்கு மாதம் பேஷன் டிசைனர், தையல் மற்றும் பேட்டர்ன் மேக்கிங் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பிளஸ் 2 மற்றும் அதற்கு மேல் கல்வித்தகுதியுள்ள, 18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டோர் இப்பயிற்சியில் இணையலாம். பாடப்புத்தகம், உணவு,- தங்குமிடம் இலவசமாக வழங்கப்படுகிறது. கம்ப்யூட்டர், ஆங்கில கல்வி இலவசமாக அளிக்கப்படுகிறது. பயிற்சி முடிப்போருக்கு, மத்திய, மாநில அரசின் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
திருப்பூரில் இயங்கும் முன்னணி ஏற்றுமதி நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் பெற்றுத் தரப்படுகிறது. விபரங்களுக்கு, 80563 - 23111, 80566 - 91111 என்கிற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
