ADDED : ஜூலை 21, 2025 10:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்; அன்னுார் வட்டாரத்தில், தற்போது பருத்தி மற்றும் உளுந்து பயிரிடுவது துவங்கி உள்ளது. இதையடுத்து, வேளாண் துறை சார்பில், அன்னுார் மற்றும் கணேசபுரத்தில் உள்ள சேமிப்பு கிடங்குகளில் மானிய விலையில் விதைகள் விற்பனை செய்யப்படுகிறது.
பருத்தி விதை ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், உளுந்து விதை கிலோ 78 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 'தேவைப்படும் விவசாயிகள் 97886 43941 என்னும் மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம்,' என வேளாண்துறை தெரிவித்துள்ளது.

