/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேளாண் பொருட்களுக்காக 100 மதிப்பு கூட்டு மையங்கள் மானியத்தில் அமைக்க அழைப்பு
/
வேளாண் பொருட்களுக்காக 100 மதிப்பு கூட்டு மையங்கள் மானியத்தில் அமைக்க அழைப்பு
வேளாண் பொருட்களுக்காக 100 மதிப்பு கூட்டு மையங்கள் மானியத்தில் அமைக்க அழைப்பு
வேளாண் பொருட்களுக்காக 100 மதிப்பு கூட்டு மையங்கள் மானியத்தில் அமைக்க அழைப்பு
ADDED : அக் 30, 2025 12:20 AM
கோவை:  'கோவை மாவட்டத்தில், வேளாண் விளைபொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய, 100 மையங்களை துவக்க, மானியம், வட்டி மானியம் வழங்கப்படும்' என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கலெக்டர் பவன்குமார் அறிக்கை:
வேளாண் விளைபொருட்களை மதிப்புக்கூட்டி விற்க, கோவை மாவட்டத்துக்கு ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் தொழில்கள், வேளாண் தோட்டக்கலை விளைபொருட்களின் இரண்டாம் நிலை அல்லது மூன்றாம் நிலை மதிப்புக்கூட்டும் தொழில்களாக இருக்க வேண்டும். பயனாளிகளுக்கு 25 சதவீத மானியம் வழங்கப்படும். பெண்கள், தொழிலில் பின்தங்கிய வட்டாரத்தில் உள்ள தொழில்முனைவோர், ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு கூடுதலாக 10 சதவீதம் என, மொத்தம் 35 சதவீத மானியம் வழங்கப்படும்.
25 அல்லது 35 சதவீத மானியம் அல்லது ரூ.1.5 கோடி இதில் எது குறைவானதோ அந்தத் தொகை, வங்கி கடனில் பின்னேற்பு மானியமாக, 60 சதவீதம் மற்றும் 40 சதவீதம் என 2 தவணைகளில் வழங்கப்படும். தவிர, 5 சதவீத வட்டி மானியம் 5 ஆண்டுகள் வரை, வேளாண் உட்கட்டமைப்பு நிதித்திட்டம் வாயிலாக, 3 சதவீத வட்டி மானியம் 7 ஆண்டுகள் வரை வழங்கப்படும்.
இத்திட்டத்தில், ஒரு நபர், நிறுவனம், குடும்பம் ஒருமுறை மட்டுமே மானியம் பெற இயலும். தங்களது வணிகத்திட்ட மதிப்பில் 5 சதவீத தொகையை பங்களிப்பாக அளிக்க வேண்டும். தொழில் துவங்க விரும்புவோர், திட்ட அறிக்கையுடன் மாவட்ட வேளாண் துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரருக்கு நிறுவன உரிமை இருக்க வேண்டும். தனியுரிமை, கூட்டாண்மை, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனமாக இருக்கலாம். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

