/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சொட்டு நீர் பாசனம் அமைக்க அழைப்பு
/
சொட்டு நீர் பாசனம் அமைக்க அழைப்பு
ADDED : ஜூலை 09, 2025 10:04 PM
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு வட்டார விவசாயிகள் சொட்டு நீர் பாசனம் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. பொது பிரிவினருக்கு, 201 ஹெக்டேர், 2.13 கோடி மதிப்பீடு மற்றும் எஸ்.சி., பிரிவினருக்கு, 54 ஹெக்டேர், 57 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் என மொத்தம், 255 ஹெக்டேர் பரப்பு, 2.7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சொட்டுநீர் பாசனம் அமைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதில், தற்போது, 80 ஹெக்டேர் வரை விவசாயிகள் பயன்படுத்தியுள்ளனர். மீதம் உள்ள பரப்பை விவசாயிகள் உடனடியாக பெற்றுக்கொள்ள வேண்டும். சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு, 100 சதவீதம் மானியமும், மற்ற விவசாயிகளுக்கு, 75 சதவீதம் மானியமும் வழங்கப்படுகிறது.
விவசாயிகள் சிட்டா, ஆதார் கார்டு, அடங்கல், ரேஷன் கார்டு நகல், புகைப்படம் (மூன்று), பேங்க் பாஸ்புக் நகல், நில வரைபடம், சிறு குறு விவசாய சான்று, எப்.எம்.பி., போன்ற ஆவணங்களை கொண்டு பதிவு செய்ய வேண்டும். இத்தகவலை, கிணத்துக்கடவு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஜமுனாதேவி தெரிவித்தார்.