தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ விதை ஆய்வகத்தை பயன்படுத்த அழைப்பு

 விதை ஆய்வகத்தை பயன்படுத்த அழைப்பு

 விதை ஆய்வகத்தை பயன்படுத்த அழைப்பு


ADDED : ஜன 10, 2026 05:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 10, 2026 05:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: தடாகம் சாலையில், சர்வதேச விதை ஆய்வக சங்கத்தின் (ஐ.எஸ்.டி.ஏ.,) ஆய்வகம் அமைந்துள்ளது. அரசு நிறுவனமான இந்த ஆய்வகம், ஐ.எஸ்.டி.ஏ., ஆரஞ்சு மற்றும் நீலச் சான்றுகள் வழங்குவதற்கு தகுதி பெற்றதாகும். இச்சான்றுகள், சர்வதேச தரத்துடன் விதைகள் ஏற்றுமதி செய்வதற்குத் தகுதியானவை என்பதை உறுதிப்படுத்துபவை.

1964ம் ஆண்டு முதல் கோவையில் இந்த ஆய்வகம் செயல்படுகிறது. இந்திய அரசின் சிறந்த விதை பரிசோதிப்பு மையம் என விருது பெற்றுள்ளது. ஸ்விட்சர்லாந்தை தலைமையிடமாகக் கொண்ட ஐ.எஸ்.டி.ஏ., அமைப்பின் சான்றளிக்கப்பட்ட இந்த ஆய்வகம், ஆரஞ்சு சர்வதேச விதைச் சான்று, நீல சர்வதேச விதைச் சான்றுகளை வழங்கும் திறன் கொண்டது.

விதை உற்பத்தியாளர்கள், விதை ஏற்றுமதியாளர்கள் பயன்படுத்திக் கொள்ள மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us