/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பறவைகளை பாதுகாக்க 'கேம்போர்டு விங்கத்தான்'
/
பறவைகளை பாதுகாக்க 'கேம்போர்டு விங்கத்தான்'
ADDED : ஜன 08, 2026 05:21 AM
கோவை: தேசிய பறவை தினத்தை முன்னிட்டு பறவைகள் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை வலியுறுத்தி, கேம்போர்டு சர்வதேச பள்ளியில், 'கேம்போர்டு விங்கத்தான்' என்ற மினி மாரத்தான் போட்டி நடந்தது.
போட்டியை சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையத்தின் மூத்த முதன்மை விஞ்ஞானி பிரமோத் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பறவை பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பது மற்றும் மாணவர்களிடையே சுற்றுச்சூழல் பொறுப்பை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார்.
பரிசு வழங்கும் விழாவில் கோவை வருமான வரித்துறை உதவி ஆணையர் மாணிக்கராஜ் வெற்றியாளர்களுக்கு கோப்பைகள், பதக்கங்களை வழங்கினார். அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
பள்ளியின் தலைவர் அருள் ரமேஷ், தாளாளர் பூங்கோதை, முதல்வர் பூனம் சாயல் ஆகியோர் பங்கேற்றனர்.

