/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொங்கல் தொகுப்பு 'டோக்கன்' வினியோகம்
/
பொங்கல் தொகுப்பு 'டோக்கன்' வினியோகம்
ADDED : ஜன 08, 2026 05:48 AM

வால்பாறை: தமிழகத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு, அரசின் சார்பில் ஆண்டு தோறும் பொங்கல்பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டில்,ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்பும், 3,000 ரூபாய் பணமும் வழங்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு வழங்க, அந்தந்த ரேஷன் கடைகள் வாயிலாக 'டோக்கன்' வினியோகம் செய்கின்றனர்.
இன்று, (8ம் தேதி) முதல் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, 'டோக்கன்' அடிப்படையில் வழங்கப்படுகிறது.
வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், 'வால்பாறை தாலுகாவில் மொத்தம், 15,250 ரேஷன் கார்டுகள் உள்ளன. இந்த கார்டுகளுக்கு, 43 ரேஷன் கடைகள் வாயிலாக பொங்கல் தொகுப்பு பணத்துடன் வழங்கப்படுகிறது.
கூட்ட நெரிசலில் சிக்காமல் பொங்கல் தொகுப்பு வழங்கும் வகையில், ரேஷன் கடை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று 'டோக்கன்' வழங்கி வருகின்றனர். டோக்கனில் குறிப்பிட்ட தேதியில் ரேஷன் கார்டுதாரர்கள் ரேஷன் கடைக்கு நேரடியாக சென்று, பொங்கல் தொகுப்பினை பெற்றுக்கொள்ளலாம்,' என்றனர்.

