தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ குப்பை கொட்டும் இடங்களில் கேமரா

குப்பை கொட்டும் இடங்களில் கேமரா

குப்பை கொட்டும் இடங்களில் கேமரா


ADDED : அக் 26, 2025 02:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 26, 2025 02:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: மாநகராட்சி வடக்கு மண்டலம், 20வது வார்டுக்கு உட்பட்ட சத்தி ரோடு, கே.ஆர்.ஜி., நகரில் உள்ள சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேற்று ஆய்வு செய்தார். அலுவலக வளாகத்தில் தேவையற்ற பொருட்களை, அப்புறப்படுத்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அப்பகுதியில் மோசமான நிலையில் இருந்த ரோடுகளை, உடனடியாக சீரமைக்க அறிவுறுத்தினார். கணபதி தென்றல் நகரில், சாலையோரம் கொட்டப்பட்ட குப்பையை உடனடியாக அப்புறப்படுத்தவும், பொது இடங்களில் குப்பை கொட்டப்படும் இடங்களில் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கவும் அறிவுறுத்தினார்.

கணபதி மாநகரில், மாநகராட்சி பொது நிதியின் கீழ் ரூ.3.36 கோடி மதிப்பீட்டில் நடந்து வரும், முதல்வர் படைப்பகம் கட்டுமான பணிகளை, விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அலுவலர்களை அறிவுறுத்தினார். உதவி கமிஷனர் துரைமுருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us