/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குற்றச் சம்பவங்களை கண்காணிக்க சரவணம்பட்டியில் கேமராக்கள்
/
குற்றச் சம்பவங்களை கண்காணிக்க சரவணம்பட்டியில் கேமராக்கள்
குற்றச் சம்பவங்களை கண்காணிக்க சரவணம்பட்டியில் கேமராக்கள்
குற்றச் சம்பவங்களை கண்காணிக்க சரவணம்பட்டியில் கேமராக்கள்
ADDED : டிச 08, 2024 03:00 AM
கோவை: சரவணம்பட்டி பகுதியில் அதிகரித்துள்ள குற்றச்சம்பவங்களை கண்காணிக்கும் வகையில் அப்பகுதியை சுற்றி கேமராக்கள் பொருத்த, போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
கோவை மாநகர பகுதிகளில் நடக்கும் வழிப்பறி, கொள்ளை, அடிதடி உள்ளிட்ட குற்றச்சம்பவங்களை தடுக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மாநகரில் மற்ற பகுதிகளை ஒப்பிடுகையில் சரவணம்பட்டி பகுதியில் திருட்டு, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் அதிகளவில் நடக்கின்றன.
இதை கண்காணிக்க போலீசார் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பொது மக்கள் உதவியுடன், சரவணம்பட்டி பகுதியை சுற்றி சுமார் 350 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, முதற்கட்டமாக சத்தி ரோட்டில் ஏழு இடங்கள், எப்.சி.ஐ., ரோட்டில் நான்கு இடங்கள், துடியலுார் ரோட்டில் மூன்று இடங்கள், மணியகாரம்பாளையம் பகுதியில் இரண்டு இடங்கள், விளாங்குறிச்சி ரோடு மற்றும் கீரணத்தம் ரோடு ஆகிய இடங்களில், தலா ஒரு இடம் என சரவணம்பட்டி பகுதியை சுற்றி, 18 இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு, 64 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கேமராக்கள் அனைத்தும் செக் போஸ்ட்டில் உள்ள கட்டுப்பாட்டு அறையுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இது, சரவணம்பட்டி பகுதியில் நடக்கும் குற்ற நிகழ்வுகளை போலீசார் கண்காணிக்க, உதவியாக இருக்கும். சரவணம்பட்டி போலீஸ் எல்லைக்குள் நுழையும் வாகனங்களை கண்காணிக்க, சரவணம்பட்டி எல்லைப்பகுதிகளில், ஏ.என்.பி.ஆர்., எனப்படும் வாகன நம்பர் பிளேட் கண்டறியும் கேமராக்கள் பொருத்தப்படவுள்ளன. இதன் மொத்த மதிப்பு ரூ. 17 லட்சமாகும்.