நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்; அன்னுார் வட்டார வேளாண் துறை சார்பில், எல்லப்பாளையத்தில், 'உழவரைத் தேடி' வேளாண் உழவர் நலத்துறை திட்ட முகாம் நடந்தது.
உதவி இயக்குனர் பிந்து தலைமை வகித்து மானிய திட்டங்கள் குறித்து விளக்கினார். முனைவர் மருதாசலம் இயற்கை வேளாண் பயிர்கள் மற்றும் சாகுபடி முறை குறித்து தெரிவித்தார். உதவி பொறியாளர் கீதா, உதவி தோட்டக்கலை அலுவலர் ரேவதி, உதவி வேளாண் அலுவலர் வினோத்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினார்கள்.