/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உழவர் தேடி வேளாண்மை திட்டம் குறித்து முகாம்
/
உழவர் தேடி வேளாண்மை திட்டம் குறித்து முகாம்
ADDED : ஜூலை 11, 2025 11:56 PM
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, அரசம்பாளையத்தில் உழவரை தேடி வேளாண்மை திட்டம் குறித்து சிறப்பு முகாம் நடந்தது.
கிணத்துக்கடவு ஒன்றியத்தில் பல்வேறு பகுதிகளில் வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை சார்பில், உழவரை தேடி வேளாண்மை, உழவர் நலத்துறை திட்டம் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதில், நேற்று அரசம்பாளையம் ஊராட்சி அலுவலக வளாகத்தில் முகாம் நடந்தது.
கிணத்துக்கடவு வேளாண் உதவி இயக்குனர் தேவி, துணை வேளாண் அலுவலர் மோகனசுந்தரம், வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் பிரியா, 'அட்மா' தலைவர் சுரேஷ், கால்நடை மருத்துவர் கிஷோர், விற்பனை கூட கண்காணிப்பாளர் செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
முகாமில், உழவு மானியம், தேசிய உணவு பொருட்கள் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கத்தின் வாயிலாக வழங்கப்படும் திட்டங்கள், சோளம் பயிருக்கான காப்பீட்டு திட்டம், ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் பதிவு செய்து உபயோகிப்பதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் கடன் திட்டம், விளை பொருட்கள் இருப்பு வைக்கும் வசதிகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இதில், 42 விவசாயிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை உதவி வேளாண் அலுவலர் மணி செய்தார்.