/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிளாஸ்டிக்கை தவிர்க்க வலியுறுத்தி பிரசாரம்
/
பிளாஸ்டிக்கை தவிர்க்க வலியுறுத்தி பிரசாரம்
ADDED : மே 18, 2025 10:07 PM

சூலுார்; கலங்கல் கிரீன் பவுண்டேஷன், சூலுார் பசுமை நிழல் அறக்கட்டளை, பருவாய் பசுமை அமைப்பு, குக்கூ சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பசுமை ஆர்வலர்கள் அமைப்புகள் சார்பில், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்பாட்டை தவிர்க்க வலியுறுத்தியும், அரசின் கவனத்தை ஈர்க்கும் விழிப்புணர்வு கூட்டம் சூலுார் புது பஸ் ஸ்டாண்ட் அருகில் நடந்தது.
அரசு தடை செய்தும், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள் பயன்பாடு, அனைத்து கிராமங்களிலும் அதிகரித்து வருகிறது. தடையை தீவிரமாக செயல்படுத்த வேண்டும், என, பசுமை ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.
இதுகுறித்து பசுமை ஆர்வலர்கள் கூறுகையில்,' அரசால் தடை விதிக்கப்பட்டும், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அரசு தடையை தீவிரமாக அமல்படுத்த வேண்டும். பொதுமக்களிடம் பிரசாரம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம், என்றனர். பொதுமக்களுக்கு மஞ்சள் பைகள் அளித்து, பிளாஸ்டிக் எதிர்ப்பு பிரசாரம் செய்யப்பட்டது.