/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காய்ச்சல் பாதிப்புக்கு ஏற்ப முகாம்: சுகாதாரத்துறையினர் தகவல்
/
காய்ச்சல் பாதிப்புக்கு ஏற்ப முகாம்: சுகாதாரத்துறையினர் தகவல்
காய்ச்சல் பாதிப்புக்கு ஏற்ப முகாம்: சுகாதாரத்துறையினர் தகவல்
காய்ச்சல் பாதிப்புக்கு ஏற்ப முகாம்: சுகாதாரத்துறையினர் தகவல்
ADDED : அக் 24, 2025 11:45 PM
பொள்ளாச்சி: வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளதால், காய்ச்சல் பாதிப்புக்கு ஏற்ப மருத்துவ முகாம் நடத்தப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகரித்துள்ளது. அதற்கேற்ப ஒவ்வொரு மாவட்டத்திலும், சுகாதார கட்டமைப்பை தயார் நிலையில் வைத்திருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி நகர், சுற்றுப்பகுதி பேரூராட்சி, ஊராட்சிகளில், மழை பாதிப்பை எதிர்கொள்ள வருவாய்த்துறையினர், உள்ளாட்சி நிர்வாகங்கள் வாயிலாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன.
இந்நிலையில், காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கேற்ப மருத்துவ முகாம் நடத்தப்படும் என, சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சுகாதாரத்துறையினர் கூறியதாவது:
உள்ளாட்சி அமைப்புகளின் உதவியுடன் குடிநீர் வினியோகத்தின் தரம் உறுதி செய்வதுடன், குடிநீரில் போதியளவு குளோரின் கலக்கப்பட்டு, வினியோகிக்கப்படுகிறதா என்பது தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. கொசுக்கள் மற்றும் பூச்சிகளால் பரவும் நோய்களை கட்டுப்படுத்த சுகாதாரப் பணியாளர்கள் தயாராக உள்ளனர்.
பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் காய்ச்சல் பாதிப்பு கண்டறிந்தால், அங்கு, மாஸ் கிளீனிங் செய்யப்பட்டு மருத்துவ முகாம் நடத்தப்படும். காய்ச்சல் பாதிப்புக்கு ஏற்ப மருத்துவ முகாம்கள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு, கூறினர்.

