/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காம்பவுண்ட் சுவரை 'பிளிந்த் பீம்' போடாமல் கட்டலாமா? எதிர்கால பிரச்னைகள் குறித்து பொறியாளர் விளக்கம்
/
காம்பவுண்ட் சுவரை 'பிளிந்த் பீம்' போடாமல் கட்டலாமா? எதிர்கால பிரச்னைகள் குறித்து பொறியாளர் விளக்கம்
காம்பவுண்ட் சுவரை 'பிளிந்த் பீம்' போடாமல் கட்டலாமா? எதிர்கால பிரச்னைகள் குறித்து பொறியாளர் விளக்கம்
காம்பவுண்ட் சுவரை 'பிளிந்த் பீம்' போடாமல் கட்டலாமா? எதிர்கால பிரச்னைகள் குறித்து பொறியாளர் விளக்கம்
ADDED : டிச 20, 2025 05:31 AM

மனை வாங்கும் போது நாம் பத்திரப்பதிவுத் துறையில் கொடுக்கும் வில்லங்கசான்றிதழ் மற்றும் முன்னாள் பதிவு செய்த உண்மை ஆவணங்கள்: -குமாரசாமி: முதலில் வில்லங்கங்கள் இல்லாத மனை வாங்குவதே, நம் கட்டடத்திற்கு பலமான அஸ்திவாரமாகும். பத்திர பதிவுத்துறையில் கொடுக்கும் வில்லங்க சான்றிதழ், சிட்டா, பட்டா மட்டும் போதாது. இடத்தில் கோர்ட் வழக்குகள் இருந்தால் அது நமக்கு தெரியாது. நமக்கு தெரியாதவர்களின் மனைகள் வாங்கினால் தீர விசாரித்து, வழக்குகள் ஏதாவது உள்ளதா என ஆராய்ந்து சட்ட அறிவுரைகள் பெற்று வாங்குவது நல்லது.
நாங்கள் கட்டிக் கொண்டிருக்கும் வீட்டில் ஒரு அறையில் மட்டும் மரம் கொண்டு தளம் அமைக்க நினைக்கின்றேன். அதற்கு என்ன செய்ய வேண்டும்?: -பழனியப்பன்: மற்ற அறைகளில் தளம் அமைத்துவிட்டு, எந்த அறையில் மரத்தின் தளம் அமைக்க வேண்டுமோ அந்த அறையில் முதலில் 'கிரானோ கான்கிரீட்' தளம் அமைக்க வேண்டும். அத்துடன் கரையான் மருந்தும் சேர்ந்து அமைக்க வேண்டும். அதன் பின் மரத்தைகொண்டு தளம்அமைக்கும்போது கட்டாயம் மரத்தின் தன்மையை பொறுத்து, விரிவாக் குவதற்கான இடம் அமைக்க வேண்டும். தவறினால் வெயில் காலங்களில் மரம் விரிவடைந்து சேதம் ஏற்படும்.
நான் எனது வீட்டில் காம்பவுண்ட் சுவற்றை: -சத்தியமூர்த்தி: பொதுவாக காம்பவுண்ட் சுவர் கட்டும் பொழுது, அதன் மண்ணின் தரத்தை ஆராய்ந்து அதற்குண்டான கட்டட முறையை பின்பற்ற வேண்டும். 'மண் உறுதித்தன்மைஇருப்பின் பிளிந்த் பீம் அவசியம் கிடையாது. அவ்வாறு காம்பவுண்ட் கட்டும் போது, 15 அடி இடைவெளியில் 'எக்ஸ்பேன்ஷன் ஜாயின்ட்' விட்டு கட்டுவது மிகச்சிறந்தது. சுவரின் மேற்பகுதியில் மூன்று இன்ச் உயரத்தில் கான்கிரீட்போடுவதால், வெடிப்புகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். காம்பவுண்ட் சுவர் சரி செய்ய தகுந்த பொறியாளரிடம் ஆலோசனை பெறவும்.
எங்கள் வீடு கட்டி: -செந்தில்குமார்: கூரை மேற்புறம் நல்ல முறையில் இருந்தால்நீர்க்கசிவு ஏற்படாது. எனவே, அதனை ஆராய்ந்து கூலிங்பெயின்ட் அடித்தால் செலவு குறைவாக இருக்கும். கூல் ரூப் டைல்ஸ் ஓட்டுவதால் செலவு சற்று அதிகம். ஆனால் நீடித்து இருக்கும்.
-லோகநாதன்: மக்கள் தொடர்பு அலுவலர்: கோயம்புத்துார் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்கம்(காட்சியா).:

