/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
சிறப்பு கட்டுரை
/
தான செட்டில்மென்ட் சொத்தை வாரிசுகளுக்கு பங்கு பிரிக்க முடியுமா?
/
தான செட்டில்மென்ட் சொத்தை வாரிசுகளுக்கு பங்கு பிரிக்க முடியுமா?
தான செட்டில்மென்ட் சொத்தை வாரிசுகளுக்கு பங்கு பிரிக்க முடியுமா?
தான செட்டில்மென்ட் சொத்தை வாரிசுகளுக்கு பங்கு பிரிக்க முடியுமா?
ADDED : டிச 13, 2025 07:46 AM

ஒரு நபர் தனது சுய உழைப்பில் சம்பாதித்த சொத்தை தனது காலத்துக்கு பின் யார் யார் பயன்படுத்த வேண்டும் என்பதை முடிவு செய்ய உரிமை உள்ளது. இந்த உரிமையை உறுதி செய்ய உயில் எழுதும் பழக்கம் நீண்டகாலமாக நடைமுறையில் உள்ளது.
ஆனால், இதில் சம்பந்தப்பட்ட நபர் இறந்த பின் தான் உயில் அமலுக்கு வரும். அப்போது தான் வாரிசுகள் சொத்தை அனுபவிக்க முடியும். இந்நிலையில், உயில் எழுதுவதற்கு மாற்றாக, செட்டில்மென்ட் பத்திரம் எழுதும் வழக்கம் சமீப காலமாக அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
இதன்படி, ஒரு நபர் தான் சம்பாதித்த சொத்துக்களை, தான் வாழும் காலத்திலேயே வாரிசுகளுக்கு பங்கிட்டு அவர்கள் பெயரில் செட்டில்மெண்ட் பத்திரம் வாயிலாக மாற்றலாம்.
இதில் சட்ட ரீதியாக சில கேள்விகள் எழும் நிலையில், செட்டில்மென்ட் பத்திர பயன்பாட்டில் குழப்பம் ஏற்படுகிறது. குறிப்பாக, முந்தைய தலைமுறை வாரிசுகளிடையே பாகப்பிரிவினை வாயிலாக பங்கிடப்பட்ட சொத்தை பெற்ற ஒருவர், அதை செட்டில்மென்ட் வாயிலாக அடுத்த தலைமுறை வாரிசுகளுக்கு கொடுக்கலாமா என்ற கேள்வி எழுகிறது.
பொதுவாக பரம்பரை வழியில் சொத்து பெற்றவர் அதை தன் தனிப்பட்ட சொத்தாக கருத முடியாது, அதில் அவரது வாரிசுகள் பங்கு கேட்க உரிமை உள்ளது. இத்தகைய சொத்தை அவர் உயில் அல்லது செட்டில்மெண்ட் பத்திரம் வாயிலாக வாரிசுகளில் ஒரு சிலருக்கு மட்டும் பங்கிட முடியாது.
தகுதி உள்ள அனைத்து வாரிசுகளுக்கும் சமமாக அந்த சொத்தை பங்கிட்டு கொடுக்க வேண்டும் என்பதே சட்ட ரீதியான நடைமுறையாக உள்ளது. இதில் பரம்பரை சொத்தை பெற்ற நபர் அதை தனது வாரிசுகள் பெயரில் பங்கிடும் போது தன் பெயரில் ஒரு பாகத்தை வைத்துக் கொள்ள உரிமை உள்ளது.
அந்த ஒரு பாகத்தை அவர் தன் தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் யாருக்கு வேண்டுமானாலும் எழுதி கொடுக்கலாம். அதை பிற வாரிசுகள் ஆட்சேபிக்க முடியாது. அதில், பங்கு கேட்கவும் முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
பாகப்பிரிவினை சொத்தை பெற்றவர் அதை அப்படியே அடுத்த தலைமுறை வாரிசுகளுக்கு மொத்தமாக கொடுக்க வேண்டும் என்பது இல்லை. அதில் தனக்கும் ஒரு பாகத்தை பெற உரிமை உண்டு என்கின்றனர் சட்ட வல்லுனர்கள்.

